ஏராளாமான குளறுபடிகளோடு முடியும் இடைத்தேர்தலால், புதிய ஆட்சிக்காக, தமிழகத்தில் முழுமையான சட்டமன்றத் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்த்து நிற்கிறார்கள் தமிழ்மக்கள். நடந்து முடியப் போகிற இடைத்தேர்தல் அதற்கான தமிழ்மக்களின் ஆணையாகவே பார்க்கப் படுகிறது. இந்தப் பரபரப்புகளுக்கிடையே விஜய் தொலைக்காட்சி தனது பிக்பாஸ் 3வது பருவத்தை தொடங்கவிருக்கிறது. தமிழ்மக்களிடம் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. 26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: எத்தனையோ சர்ச்சைகளுக்கு நடுவிலும் இரண்டு பருவங்களை வெற்றிகரமாக கடந்துவிட்டது பிக்பாஸ். இரண்டாவது பருவத்தில் போட்டியாளர்கள் மிகவும் கொடுமைப் படுத்தப் பட்ட நிலையில் இந்த மூன்றாவது பருவம், தொடர்ந்து ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சிறப்பாக முன்னெடுக்கப் படுமா? அல்லது பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் போது, வேறு தொலைக்காட்சிக்கு மாறும் வகையிலாக வெறுப்பு ஏற்படுத்தப் படுமா? எகிறுகிறது பிக்;பாஸ் பருவம் 3 குறித்த எதிர்பார்ப்பு. உலக நாயகன் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இம்முறையும் அவரே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த பருவம் 3 ல் பெரியத் திரை, சின்னத் திரை பிரபலங்கள் நடிகைகள் லைலாவும், சாந்தினியும், சுதா சந்திரனும் கலந்துகொள்கிறார்கள் என நம்பததகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,147.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.