இந்தியா விடுதலை பெற்ற கடந்த 75 ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக ஆகிய ஒற்றைக்கட்சிகளுக்கு அறுதிபெரும்பான்மையில் இந்திய மக்கள் கொடுத்த ஆட்சி- சில வடஇந்திய கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு மட்டுமே பயன்பட்டு வந்திருக்கிறது. இதை உணர்ந்து விழித்தெழுகின்றன எதிர்க்கட்சிகள். 09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா விடுதலை பெற்ற கடந்த 75 ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக ஆகிய ஒற்றைக்கட்சிகளுக்கு அறுதிபெரும்பான்மையில் இந்திய மக்கள் கொடுத்த ஆட்சி சில வடஇந்திய கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு மட்டுமே பயன்பட்டு வந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி, ஹிந்தியை மற்ற மாநிலங்களில் திணித்து ஹிந்திபேசும் மக்கள் அந்த மாநிலங்களில் குடியேறி கொத்தடிமைகளாக பிழைப்பு பெற வழிவகுத்தனவேயன்றி, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் போல தங்களைத் தொடர்ந்து ஆதரித்து வரும், ஹிந்தி பேசும் மக்கள் கல்வியில் சிறக்க வழி வகுக்காமல் அவர்களை மூடநம்பிக்கைகளிலேயே கிடத்தி வைத்திருந்தது. இன்றைக்கு ஒன்றிய ஆட்சியில் இருக்கிற பாஜக, இன்னும் ஒருபடி மேலே சென்று, காங்கிரசில் இருந்து மாறி தற்போது தங்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் ஹிந்தி பேசும் மக்களை இந்தியா முழுவதும் பாணிபூரி விற்றும், குல்பி விற்றும் ஆங்காங்கே கூடாரம் அடித்து பிழைப்பு நடத்துவதற்கு ஒத்துழைப்பாக ஒரேநாடு ஒரே குடும்ப அட்டை என்று மாநில மக்களின் வரிப்பணத்தில் இருந்து இலவச அரிசி பெறுவதற்கு உரிமை தேடித்தந்திருக்கிறது. ஹிந்தி பேசும் மக்கள் கல்வியில் சிறக்க வழி வகுக்காமல் அவர்களை மூடநம்பிக்கைகளிலேயே கிடத்தி வைக்க பல சாமியார்களையும் வளர்த்து விட்டுக் கொண்டிருக்கிறது. கொள்ளை நோயான கொரோனாவிலிருந்து கூட மக்களை மீட்க இலவச தடுப்பூசி வழங்க முயலாமல், இன்று வரை இழுத்தடித்து வந்திருக்கிறது. இந்தியாவில் முழுமையாக இரு தடவைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விழுக்காட்டின் இந்திய சராசரி இன்னும் ஐந்தைத் தாண்டவில்லை. இன்றைய ஒன்றிய ஆட்சியில் சில கார்ப்பரேட்டுகளையும் சில சாமியார்களையும் வளப்படுத்திக் கொண்டிருக்கும் பாஜக ஆட்சியில். இவற்றையெல்லாம் உணர்ந்து கொண்ட எதிர்கட்சியினர், மூன்று மாநிலத் தேர்தல்வெற்றியைத் தொடர்ந்து, பாஜகவிற்கு எதிராக அணிதிரள களம் வகுக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்த வகைக்கு சரத்பவார் வீட்டில் எட்டு கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். மராட்டிய மாநிலத்தில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில், காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இணைந்து பங்கேற்றுள்ளன. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க சரத்பவார் முன்வந்திருக்கிறார். இதற்காக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை அணி திரட்டி வருகிறார். இதுதொடர்பாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிசோருடன் அண்மையில் அவர் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், நேற்று சரத்பவார் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அதில், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா (திரிணாமுல் காங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), கான்ஷ்யாம் திவாரி (சமாஜ்வாடி), ஜெயந்த் சவுத்ரி (ராஷ்டிரீய லோக்தளம்), சுசில் குப்தா (ஆம் ஆத்மி), பினாய் விஸ்வம் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), நிலோத்பல் பாசு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) ஆகியோர் கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவாரும் பங்கேற்றார். காங்கிரசில் இருந்து விலகிய சஞ்சய் ஜா, ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து விலகிய பவன் வர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற அறங்கூற்றுவர் ஏ.பி.சா, கவிஞர் ஜாவீத் அக்தர், கே.சி.சிங் ஆகிய பேரறிமுகங்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை சரத்பவார் நடத்தியபோதிலும், இதை ‘ராஷ்டிரீய மஞ்ச்’ அமைப்பு சார்பில் யஷ்வந்த் சின்கா ஏற்பாடு செய்தார் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.