கேரளாவில் பாஜக வளர முடியாதது ஏன்? ‘கேரளாவில் தொன்னூறு விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்று இருப்பது ஒரு காரணம்’ என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் இராஜகோபால் பறைசாற்றிய செய்தி, இந்தியா முழுவதும் பரவி பாமர மக்கள் விழிப்புணர்வு எய்த வாழ்த்துக்கள். 12,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியால் வேரூன்ற முடியாமல் போனதற்கு அந்த மாநிலத்தில் தொன்னூறு விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றிருப்பது பெருங் காரணம் என்று கேரள பாஜகவின் மூத்த தலைவரும், அந்த மாநில சட்டமன்றத்தில் பாஜகவுக்கு இருக்கும் ஒரே உறுப்பினருமான ஓ.ராஜகோபால் தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் ஒன்றிய அமைச்சரும்கூட. ஹரியாணா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ச்சியடைந்த பாஜகவால் கேரளாவில் வளர முடியாமல் போனது குறித்து ஒரு பேரறிமுக நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின்போது இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.ராஜகோபால் இவ்வாறு கூறியுள்ளார். கேரளாவில் 90 விழுக்காடு கல்வியறிவு உள்ளது. அவர்கள் சிந்திக்கிறார்கள் மற்றும் விவாதப்பாடாக இருக்கிறார்கள். இவை படித்த மக்களின் பண்புகள். இது ஒரு சிக்கல். மேலும் கேரளாவில் 55 விழுக்காடு ஹிந்துக்களும் 45 விழுக்காடு சிறுபான்மையினரும் இருப்பது இந்த மாநிலத்திற்கு உரிய சிறப்பம்சம். இது இன்னொரு சிக்கல். ஒவ்வோர் அரசியல் கணக்கிலும் இந்த அம்சம் உள்ளே வருகிறது. இதனால்தான் பிற மாநிலங்களுடன் கேரளாவை ஒப்பிட முடியாது. இங்கு சூழ்நிலையே வேறு. ஏன்று ஓ. இராஜகோபால் தெரிவிக்கிறார். மேலும் கூறும் போது, ஆனால் இங்கு நாங்கள் மெதுவாகவும் நிலையாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறோம், என்றும் அவர் கூறியுள்ளார். அப்படியானால் பாஜக கேரளாவில் உள்ள அந்த இரண்டு சிக்கல்களுக்கும் மாற்றுத் தீர்வுக்குச் (நுழைவுத் தேர்வுகள், மதமோதல்கள்) சிந்திந்து வருகிறது என்றால், கேரள மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பது கேரள மக்களின் எதிர்காலத்திற்கான செய்தியாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.