அள்ளி அள்ளி கொடுத்திருப்போம் என்று, செய்து காட்டியது காங்கிரஸ்! இந்தக் கொரோனா பாதிப்பில் நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் உறுதியாக மக்கள்விலை கொடுப்பில் ஊரடங்கை முன்னெடுத்திருக்க மாட்டோம் என்று பேச்சளவில் சொல்லாமல். 26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்த நேரத்தில் சோனியா காந்தி அவர்கள், அதிரடியாகக் களமிறங்கி புலம் பெயர் தொழிலாளர்கள் நடுவே நல்ல பெயரைப் பெற்றுள்ளார் என்கின்றனர் பொதுப்பார்வையாளர்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் சிக்கியிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்று போராட தொடங்கினார்கள். இதனால், தொடர்வண்டிப் போக்குவரத்தைத் தொடங்க நடுவண் அரசு முன்வர வேண்டியதாயிற்று. அறுத்த கைக்கு சுண்ணாம்பு கூட தர மணமில்லாத இயல்புடைய நடுவண் பாஜக அரசு தொழிலாளர்கள் இதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது. காசில்லாத தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இதைக் கவனித்த கர்நாடக முன்னாள் அமைச்சரான சிவக்குமார், வெளி மாநிலங்களிலுள்ள கன்னடர்களை அழைத்து வரும் செலவை, கர்நாடக காங்கிரஸ் ஏற்கும் என்று அறிவித்து, அதற்கு ஒரு கோடி ரூபாயைக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, வெளிமாநிலத் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தைக் காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று சோனியா அறிவித்தார். அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் இதையே பின்பற்றச் செய்தார்கள். அந்த வரிசையில் தமிழக காங்கிரசும் அடக்கம். சோனியாவின் இந்த அதிரடியில் ஆடிப்போன நடுவண் அரசு, பயணிகளின் கட்டணத்தில் 85 விழுக்காடு நடுவண் அரசும், 15 விழுக்காட்டை மாநில அரசும் (இதை கடைந்த மோரில் வெண்ணெய் எடுத்தல் என்று தமிழ் முன்னோர்கள் தெரிவிப்பார்கள்.) ஏற்கும் என்று அறிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



