இன்று தமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு இருக்கின்றார்கள். அதிமுக அரசை பாராட்டலாம் என்றால்- தற்போது டாஸ்மாக் வணிகத்தில் முனைப்பு காட்டி, ஊரடங்கிற்கு விலைகொடுத்து வரும் தமிழக மக்களை மது வணிகத்திற்கும் தலைகொடுக்க வேண்டும் என்று முரண்டு பிடித்து வரும் நிலையில், தமிழக அதிமுக அரசு இந்த சாதனைகளில் இருந்து மக்களால் விலக்கிப்பார்க்கப்படுகிறது. 26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த ஒரு கிழமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளன. அனைத்து பாதிப்புகளும் கோயம்பேடு சந்தை சார்ந்தவைகளே. இந்தக் கோயம்பேடு அதிரடி பாதிப்புகளுக்கு முன்பு கொரோனா பதிக்கப்பட்டவர்களில், பழைய கொரோனா நோயாளிகளாக சிகிச்சையில் இருப்வர்கள் 420 பேர்கள் மட்டுமே! இன்று தமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு இருக்கின்றார்கள். திடீரென்று இன்றைக்கு இத்தனை குணமளிப்பா என்று வியந்து பெரிதாக காரணம் ஏதும் தேட வேண்டியதில்லை. கோயம்போடு பாதிப்புக்கு முந்தைய நிலையில் பழைய நோயாளிகளாகச் சிகிச்சையில் இருக்கிற அந்த 420 பேர்களில்தாம் இன்றைக்கு 219 பேர்கள் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலையில் கோயம்பேட்டு பாதிப்புக்கு முந்தைய பழைய நோயாளிகள் மீதம் 201பேர்கள். அவர்களும் நாளையோ நாளை மறுநாளோ உறுதியாக குணமாகி விடுவார்கள். அப்புறம் அடுத்த குணமளிப்புகளுக்கு கொஞ்ச நாள் எடுக்கிற நிலையில் யாரும் அஞ்சத்தேவையில்லை. காரணம் கொத்து கொத்தாக புதிய நோயாளிகள். தமிழக மருத்துவத்துறையும், நலங்குத்துறையும், காவல்துறையும் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகின்ற நிலையில், கொரோனா குறித்து தமிழக மக்கள் கவலைகொள்ளவோ அஞ்சவோ தேவையில்லை. தமிழகத்தில் இன்று மட்டும் 526 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 279 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக சென்னையில் மட்டும் 3330 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 1824 பேர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். கோயம்பாடு பாதிப்புகளால் அன்றாடம் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வந்த நிலையில், தமிழகத்தில் குணப்படுத்தப்படும் நபர்களின் விழுக்காடு 70ல் இருந்து வேகமாக குறைந்தது. இந்த விழுக்காடு 45 ஆக குறைந்தது. இது தொடர்ந்து குறைந்து 25க்கும் கீழ் சென்றது. நேற்று குணமடைவோர் விழுக்காடு 26.71 ஆக இருந்தது. இன்று அது கொஞ்சம் அதிகரித்துள்ளது. இன்று இந்த விழுக்காடு 27.91 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்த கிழமைகளில் குணமடைவோர் விழுக்காடு எளிதாக எண்பதைத் தாண்டி நூறைத் தொடும். தமிழகத்தில் கொரோனா சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது இன்று மட்டும் 12299 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 2,19,406 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனைகள் அதிமுக அரசுக்கும் இதுவரை சென்றுசேர்ந்து பாராட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது டாஸ்மாக் வணிகத்தில் முனைப்பு காட்டி ஊரடங்கிற்கு விலைகொடுத்து வரும் தமிழக மக்களை மது வணிகத்திற்கும் தலைகொடுக்க வேண்டும் என்று முரண்டு பிடித்து வரும் நிலையில் தமிழக அதிமுக அரசு இந்த சாதனைகளில் இருந்து மக்களால் விலக்கிப்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



