குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காரணத்துக்காக அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் முகமது ஜான் முகமதிய அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை முகமதிய அமைப்பு (ஜமாத்) கூட்டமைப்பு காப்பாளர் பதவியில் இருந்து அவரை நீக்கி நடவடிக்கை எடுத்;துள்ளது. 02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காரணம்பற்றி அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் முகமது ஜான் முகமதிய அமைப்பில் (ஜமாஅத்) இருந்து நீக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே குடியுரிமைச் சட்டத் திருத்த சட்டமுன்வரைவை இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித்சா மக்களவையில் பதிகை செய்தார். இரு அவைகளிலும் நிறைவேறிய சட்டமுன்வரைவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னர் சட்டமாகியுள்ளது. இதையடுத்து, இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து என்று விழிப்புணர்வு அடைந்திருப்பது, இலங்கை தமிழர்களை இந்த வாய்ப்பில் திட்டமிட்டு புறக்கணித்திருப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமைச் சட்டத் திருத்த முன்வரைவுக்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு தெரிவித்தது. மாநிலங்களவையில் நடைபெற்ற சட்டமுன்வரைவு தொடர்பான வாக்கெடுப்பை புறக்கணித்து சிவசேனா வெளிநடப்பு செய்து சிவசேனாவும், வஞ்சகமாக குடியுரிமைச் சட்டத் திருத்த முன்வரைவுக்கு மாநிலங்களவையில் ஆதரவு அளித்தது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சட்டமுன்வரைவுக்கு எதிராக வாக்களித்தனர். இலங்கை தமிழர்கள் விடுபட்டது என சர்ச்சைக்குரிய இந்த சட்டமுன்வரைவுக்கு அதிமுக ஆதரவளித்துள்ளதற்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காரணத்துக்காக அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் முகமது ஜான் முகமதிய அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை முகமதிய அமைப்பால் (ஜமாத்) கூட்டமைப்பு காப்பாளர் பதவியில் இருந்து அவரை நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,369.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



