Show all

தாழ்மையாகக் கேட்டுக்கொண்டுள்ளார் உத்தவ் தாக்கரே! வெடிகுண்டு போன்ற இளைஞர்கள் சக்தியை பற்ற வைத்து விடாதீர்கள்

‘இளைஞர்கள் ஆத்திரமடைந்தால் நாடும் மாநிலமும் அமைதியாக இருக்காது. இளைஞர்கள்தான் நம்முடைய பலமே. மிக விரைவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக நாம் இருப்போம். இளைஞர்கள் சக்தி வெடிகுண்டு போன்றது. அதைப் பற்ற வைத்து விடாதீர்கள் என தலைமைஅமைச்சரிடம் மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் உத்தவ் தாக்கரே.

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதல் நிகழ்வுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. டெல்லி காவல்துறையினர் மாணவர்களிடம் நடந்துகொண்ட விதம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்துவதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயும் கூறியுள்ளார்.

பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்து காவல்துறையினர் மீது கற்களைக் கொண்டு தாக்கினர். இதன்காரணமாகவே பல்கலைக்கழகத்துக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே இவ்வாறு செயல்பட்டோம் என காவல்துறை வழக்கமாக தெரிவிக்கும் காரணத்தை முன்வைத்துள்ளது.

இந்த நடத்தைத் தொடர்பாக பேசியுள்ள உத்தவ் தாக்கரே, ‘டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் நுழைந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தியது, எனக்கு ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவுபடுத்தியது. ஜாலியன் வாலாபாக் போன்ற சூழலை இங்கே உருவாக்கி மாணவர்களிடம் பயத்தை விதைக்கப் பார்க்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்.

இளைஞர்கள் ஆத்திரமடைந்தால் நாடும் மாநிலமும் அமைதியாக இருக்காது. இளைஞர்கள்தான் நம்முடைய பலமே. மிக விரைவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக நாம் இருப்போம். இளைஞர்கள் சக்தி வெடிகுண்டு போன்றது. அதைப் பற்ற வைத்து விடாதீர்கள் என தலைமைஅமைச்சரிடம் மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,369.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.