01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நம்ம இந்தியத் தலைமை அமைச்சர் மோடியின் அடுத்த சுற்றுலாவிற்கான பயண நாடு உருசியாவாம். இதுகுறித்து, நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உருசிய அதிபர் விளாடிமிர் புதினுடனான ஆலோசனைக் கூட்டம் அடுத்த கிழமை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, வரும் திங்கள் அன்று இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி உருசிய செல்லவுள்ளார். சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் நிலைப்பாட்டை பகிர்ந்துகொள்ளவும், இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தவும் இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கடந்த மாதம் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,788.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



