31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான பதினான்கு பக்க வரைவு அறிக்கையை உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நடுவண் அரசு இன்று பதிகை செய்தது. இன்றைய விசாரணையின் போது காவிரி மேலாண்மைக்காக தலைவர் தவிர்த்து ஒன்பது பேர்கள் கொண்ட குழுவை அமைக்க நடுவண் அரசு தயாராக இருப்பதாக நேரில் அணியமான நடுவண் நீர்வளத்துறை செயலாளர் யு,பி.சிங் உறுதி அளித்தார். தலைவரை நடுவண் அரசு நியமிக்கும் அவருக்கான பதவி காலம் ஐந்து ஆண்டுகள் என்று சொல்லப் படுகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்வதற்கான அமைக்க வேண்டும் என்பது உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவு. இதற்கான வரைவு திட்ட அறிக்கையை நடுவண் அரசு பதிகை செய்ய வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றம் கெடு விதித்திருந்தது. இதையடுத்து உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி நடுவண் அரசின் நீர்வளத்துறை செயலர் யு.பி. சிங் இன்று நேரில் அணியமாகி வரைவு திட்டத்தைத் பதிகை செய்தார். ஒழுங்காற்றுக் குழுவா? மேலாண்மை வாரியமா? என்பதை அறங்கூற்று மன்றம் தெளிவு படுத்தும்; எதுவாகினும் 1. அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும். 2. அமைப்பின் தலைவர் உறுப்பினர்களுக்கு நீர் மேலாண்மை குறித்த அனுபவம் இருக்க வேண்டும். 3. உறுப்பினர்கள் நடுநிலையும் சமூக அக்கறையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். கர்நாடகத்தின்- இந்திய விடுதலைக்குப் பின்பான காவிரி ஆக்கிரமிப்புகளை யாரும் மனதில் கூட எண்ண முயலாமல், அப்படியே வைத்துக் கொண்டு, ஒரு தலைபட்சமாகவே, முன்னெடுக்கிற இந்தத் தீர்வும் கூட தற்காலிகமானதுதான் என்பது மட்டும் உண்மை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,787.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



