நடுவண் பாஜக அரசு அறிவித்திருக்கிற ஊரடங்கால்- வேலையிழந்த ஏழைகளும் வீடற்ற தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்கள் சாப்பாட்டுக்கு சிரமப்படும் சூழல் உருவாகத் தொடங்குகிறது. என்று ஓர் ஆய்வுத்தகவல். அதற்குத் தீர்வாக தமிழகத்தில் மனிதநேயமும், வடக்கிலோ மதவாதமும் முன்னெடுக்கப் படுகிறது. 21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தாக்கம் குறித்து முதல்வர் எடப்பாடிக்கு மாநில உளவுத்துறை, அண்மையில் அனுப்பியது ஓர் ஆய்வுத்தகவல். வேலையிழந்த ஏழைகளும் வீடற்ற தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்கள் சாப்பாட்டுக்கு சிரமப்படும் சூழல் உருவாகத் தொடங்குகிறது. என்பதுதான் அந்த ஆய்வுத்தகவல். பட்டினியால் ஒரு உயிர் போனாலும் அரசுக்கு மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள நிலையில், அதிர்ச்சியடைந்த தமிழக முதல்வர் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் ஒருமணிநேரம் விவாதித்திருக்கிறார். அந்த ஆலோசனையில், பட்டினிச்சாவுங்கிறது கொரானோவைவிட கொடுமையானது. அப்படி ஒரு சூழல் வரக் கூடாது. உள்ளாட்சித் துறை சார்பில், தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் இருக்கின்றன. சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள். இவைகளை 24 மணிநேரமும் இயங்க வைக்கலாம் என வேலுமணி சொல்ல, அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள் என்றிருக்கிறார் எடப்பாடி. இதுகுறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் பேசிய வேலுமணி, அம்மா உணவகங்களை 24 மணி நேரமும் இயக்க வேண்டும். பணியாளர்களுக்கு 3 முறைப்பணி கொடுங்கள். சமையலுக்குத் தேவையான பொருட்களுக்குப் பற்றாக்குறை இருக்கக்கூடாது. தேவையான பொருள்கள் எப்போதும் இருக்க வேண்டும். சாப்பிட வருபவர்களுக்கிடையே 1 மீட்டர் இடைவெளி இருப்பதையும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்யுங்கள் என உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, அம்மா உணவகங்களை 24 மணி நேரம் இயக்கவும், அரசு காப்பகங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் நடமாடும் அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர் அதிகாரிகள். முந்தைய காலக்கட்டத்தில் சென்னையில் ஒரு அம்மா உணவகத்தில் அன்றாடம் சுமார் 800 பேர் என 407 அம்மா உணவகத்திலும் 3,25,000 பேர் உணவுண்டு வந்தனர். தற்போது, பல மடங்கு அதிகரித்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கின்படி சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 14 லட்சம் பேர் சாப்பிட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக இயங்கி வரும் அம்மா உணவகத்தில் காலை உணவாக இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும்; மதிய உணவாக சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், கருவேப்பிலை சாதம், கீரை சாதம் ஆகியவை தலா 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும்; இரவு நேரத்தில் பருப்பு கடைசலுடன் 2 சப்பாத்திகள் 3 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. தற்போது பல இடங்களில் இலவசமாகவும் உணவு வழங்க உத்தர விடப்பட்டிருக்கும் நிலையில், மக்களின் உணவகங்களாக உயர்ந்துள்ளது அம்மா உணவகங்கள். சனவரி 30 அன்று முதல் கொரோண தொற்று கேரளாவில் கண்டுபிடிக்க படுகிறது. பிப்ரவரி 12 அன்று ராகுல் காந்தி கொரோண தொற்று பரவிக் கொண்டிருப்பதை பற்றி பேசுகிறார். பாஜக அமைச்சர்கள் ராகுலை வசை பாடினார்கள். பிப்ரவரி மாதத்தில் நடுவண் பாஜக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வருபவர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்தி, தனிமைப் படுத்தியிருக்க வேண்டும். பிப்பரவரி மாதத்தில் இருந்தே அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் நாடு முழுக்க தடை செய்து இருக்க வேண்டும். தமிழக அரசுக்கு போல பாஜக நடுவண் அரசுக்கும் உளவுத்துறை இருக்கிறது. அதுவும் ஆய்வு அறிக்கை தரும். ஆனால் பாஜக நடுவண் அரசு அதையெல்லாம் எந்த அளவுக்கு மதிக்கும் என்றுதான் தெரியவில்லை. சகின்பாக் போராட்டத்தை கலைக்க குண்டர்களை ஏவி விட்டு 10–15 பேரை கொன்றார்கள். டிரம்ப்பை அழைத்து வர குஜராத்தில் அவமானச்சுவர் எழுப்ப என்பதான நிகழ்ச்சியை நடத்துவதில் மும்பரமாக இருந்தார்கள். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் வேலையை செய்து கொண்டிருந்தார்கள். இவையெல்லாம் முடிந்த பிறகு திடீர் என்று அரசமரத்தடியில் புத்தருக்கு அறிவில் ஒரு தெளிவு கிட்டியது போல மார்ச் 22 ஞாயிற்குக் கிழமை அன்று சுயஊரடங்கு அறிவிக்கிறது நடுவண் பாஜக அரசு. ஒருநாள் சுயஊரடங்கு குறித்து, ‘கொரோனா அடுத்த நிலைக்கு எட்டும்’ என்று இரஜினி பெருமையாகப் பேச, கீச்சு அந்தக் காணொளியை பொய்யான வதந்தி என அகற்ற, பாஜகவுக்கு ஒருநாள் ஊரடங்கு போதாது என்பது புரிந்து போக, ஒரு நாள் கழித்து இந்தியா முழுவதும் ஊரடஙகு உத்தரவை பிறப்பிக்கிறார் மோடி. ஜனவரி 30ல் இருந்து மார்ச் 22 வரை கொரோணா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் இந்தியாவுக்குள் நிறைய வந்திருக்கிறார்கள். உளவுத்துறை ஆய்வுஅறிக்;கையும் நடுவண் அரசுக்குக் கிடைத்திருக்கும். ஆனாலும் கொரோனா தொற்று இருந்தவர்களைக் கண்கானிக்காமல் கோட்டை விட்டதை மறைப்பதற்கு நிஜாமுதீன் கூட்டம் தான் கொரோனா பரவ காரணம் என்பதான மதவாதத்தை முன்னெடுத்து, தப்பிக்கும் நடவடிக்கையில் களம் இறங்கியிருக்கிறது பாஜக.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



