Show all

கொரோனா ஊரடங்கு ஓய்வு நிர்பந்தம்- நேரலையில் வரும் பேரறிமுகங்கள்! அந்த வரிசையில் பிரசன்னா

ஓரங்கட்டப்படுவது சோர்வாக இருக்கிறது என்று கொண்டாடிகளுடன் கலந்துரையாடும்போது பிரசன்னா குறிப்பிட்டார். உங்கள் கொண்டாடிகளும் கொரோனாவால் வீடடங்கி சோர்வாகத்தான் உள்ளனர். சேர்ந்தே எழுவோம் பிரசன்னா.

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைக்காக என்று நடுவண் பாஜக அரசு ஊரடங்கை அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மருத்துவர்கள், காவல்துறையினர் ஆகியோரைத் தவிர மற்ற அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். கட்டாயத் தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.

திரையுலகப் பேரறிமுகங்களும் வீட்டிலேயே இருப்பதால், தங்களுடைய கீச்சு மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தங்கள் தங்கள் கொண்டாடிகளுடன் கலந்துரையாடி வருகிறார்கள். நேற்று மாலை தனது கீச்சுப் பக்கத்தில் கொண்டாடிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரசன்னா பதிலளித்தார்.

அண்மைக் காலமாக திரையில் பகைவனாக நடித்து வருவது குறித்த கேள்விக்கு, நான் நானாக இல்லாமல் இருப்பதற்கு அந்த வேடங்கள் ஒரு வாய்ப்பைத் தருகின்றன. அந்த மாற்றம் எனக்கு உற்சாகத்தைத் தருகிறது என்று பிரசன்னா பதிலளித்துள்ளார்.

மேலும், கதைதலைவனாக நடிக்கவுள்ள படங்கள் குறித்து ஒருவர் கேட்க, கதைத்தலைவனாக நடிக்கும் மூன்று படங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறேன். எது முதலில் தொடங்கும் என்று தெரியாது. உலகின் பலவற்றைப் பாதித்துள்ள கொரோனா இதையும் பாதித்துள்ளது என்று பிரசன்னா தெரிவித்தார்.

ஒரு முழு நகைச்சுவை சாகசப் படத்தில் உங்களைப் பார்க்க விருப்பம். என்று அந்த கொண்டாடி தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினார். அதற்கு, கண்டிப்பாக விரைவில் நடக்கும். நானும் அதைத்தான் விரும்புகிறேன். ஓரங்கட்டப்படுவது சோர்வாக இருக்கிறது. முன்னால் நிற்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் என்னை ஆதரிப்பீர்கள் என்று தெரியும். விரைவில் அந்த இடத்தை அடைவேன் என்று பதிலளித்துள்ளார் பிரசன்னா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.