Show all

முன்னால் இந்தியத் தலைமைஅமைச்சர் மன்மோகன்சிங் அறவுரை! இந்தியாவை ஆளும் பாஜக அரசுக்கு.

இந்தியாவின்- உச்சஅறங்கூற்றுமன்றம், இந்தியக் குற்றப் புலனாய்வுத் துறை, தேர்தல் ஆணையம், இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி என அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் இந்தியப் பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவது குறித்து மன்மோகன் சிங் கண்டனம்.

22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உச்சஅறங்கூற்றுமன்றம், இந்தியக் குற்றப் புலனாய்வுத் துறை, தேர்தல் ஆணையம் போன்றவை தங்களைத் தனித்துவமாக செயல்படவிட வேண்டும் என எதிர்பார்க்கின்றன என முன்னால் இந்தியத் தலைமைஅமைச்சர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் லஷ்மி பாத் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் தலைமைஅமைச்சருமான மன்மோகன் பேசியதாவது:- மக்களாட்சியை வலுப்படுத்த வேண்டுமாயின் , அறிவுசார்ந்த மற்றும் தொலை நோக்கு சிந்தனையுள்ள தலைவர்கள் தான் தேவை. அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் நாட்டின் உயரிய அமைப்பான பாராளுமன்ற சட்ட திட்டங்கள், அரசு விதிமுறைகளுக்கு நாம் நன்மதிப்பு அளிக்க வேண்டும்.

அதே நேரம் அரசியலமைப்பின் கீழ் செயல்படும், உச்சஅறங்கூற்றுமன்றம், இந்தியக் குற்றப் புலனாய்வுத் துறை, தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்புகள் தங்களை தனித்துவமாக செயல்பட விட வேண்டும் என எதிர்பார்க்கின்றன. இவற்றை இந்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,269.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.