Show all

நேற்றுடன் அறங்கூற்றுவர் பணியிலிருந்து விடைபெறும் தீபக் மிஸ்ரா! கடந்த மாதத்தில் விவாதத்திற்குரிய 4 தீர்ப்புகளை வழங்கினார்.

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்சஅறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இன்று காந்தி பிறந்தநாள் விடுமுறை  என்பதால் அவருக்கு நேற்றைய தினமே விடையளிப்பு விழா நடத்தப்பட்டது. நேற்றுடன் அறங்கூற்றுவர் வேலைக்கு முழுக்குப் போடும் தீபக் மிஸ்ரா கடந்த மாதத்தில் விவாதத்திற்குரிய 4 தீர்ப்புகளை வழங்கினார். 

நடுவண் அரசின் ஆதார் தொடர்பான ஆணைக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்ச அறங்கூற்று மன்ற தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. 

சபரிமலையில் 10 அகவை முதல் 50 அகவையுடைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து உச்சஅறங்டுகூற்றுமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சபரிமலைக்கு பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை அளித்துள்ளது. 

கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்களுக்கு இந்திய தண்டனை சட்டம் 497-இன் கீழ் 5 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பெண்களுக்கு எந்த தண்டனையும் வழங்குவதில்லை. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை அறங்கூற்றுவர் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கள்ளக்காதல் குற்றமல்ல என்று கூறியதுடன் 497 சட்டபிரிவை ரத்து செய்தது.

இந்தியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 377 பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில், ஓரின சேர்க்கை குற்றமா என்பது குறித்த வழக்கின் மீது தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் ஓரினசேர்க்கை அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,927.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.