கொரோனா நுண்ணுயிரி பரவல் தடுப்பு என்பதாக ஊரடங்கை அமல்படுத்தும் வேளையில். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவை பகுதி அளவிலாவது தளர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடு முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள ஊடரங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது அனேகமாக உறுதியாகிவிட்ட நிலையில், இதனை முழுமையாக நீட்டிப்பது தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா நுண்ணுயிரி பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று அனைததுக் கட்சிகளின் தலைவர்கள், நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர் என்று தலைமைஅமைச்சர் மோடி தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு அறிவிப்பை நினைவுப்படுத்துவதை போன்று, கடந்த மார்ச் 24 அன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதுதான், நாடு இதுவரை சந்தித்திராத 21 நாட்கள் ஊரடங்கு என்னும் அதிரடி அறிவிப்பை தலைமைஅமைச்சர் மோடி வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு முன் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி கலந்தாலோசிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்ததாலோ என்னவோ, இந்த முறை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், தமக்கு துணையாக எதிர்க்கட்சித் தலைவர்களையும், நிபுணர்களையும் மோடி அழைத்துக் கொண்டுள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டுமா, அப்படியே நீட்டித்தாலும் அதனை நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் முழுமையாக நீட்டிக்க வேண்டுமா என்ற கேள்வி மற்றொரு புறம் எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வியை எழுப்புவோர் முன்வைக்கும் காரணங்கள்:- தற்போது நடைமுறையில் உள்ள 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை மோடி அறிவித்தபோது, இந்தியாவில் இரண்டாம் நிலையில் உள்ள கொரோனா நுண்ணுயிரிப் பரவல், அதன் மூன்றாம் நிலையான சமூக பரவல் என்ற நிலையை எட்டிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் காரணமாகதான் மோடி இந்த ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் என்று நடுவண், மாநில அரசுகள் கூறி வந்தன. தமிழ்நாட்டில் ஊடரங்கு அமலுக்கு வந்தநிலையில், சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, மார்ச் 22 அன்று இரவும் மார்ச் 23 அன்று காலையும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கில் குவிந்தபோது அரசின் கொரோனா நுண்ணுயிரி பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எங்கே போயின? அங்கே கொரோனா தொற்றுக்கான வாய்ப்பே எழவில்லை. கொரோனா பரவிக்கொண்டிருந்தது வேறு இடம். அதையும் அரசு கண்காணித்துக் கொண்டுதாம் இருந்தது. அதுவே தேவை. தலைநகர் டெல்லியிலும் இதேபோன்ற கூத்து நடைபெற்றபோது உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் லட்சக்கணக்கில் பேருந்து நிலையங்களில் குவிந்தனர். அங்கே கொரோனா தொற்றுக்கான வாய்ப்பே எழவில்லை. கொரோனா பரவிக்கொண்டிருந்தது வேறு இடம். அதையும் அரசு கண்காணித்துக் கொண்டுதாம் இருந்தது. அதுவே தேவை. கூட்டம் ,கூட்டமாக அவர்கள் சொந்த ஊர்களுக்கு பல நூறு கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்றபோது தலைமைஅமைச்சர், மாநில முதல்வர்களும் தொடர்ந்து வலியுறுத்திவரும் சமூக இடைவெளி எங்கே போனது? அங்கே கொரோனா தொற்றுக்கான வாய்ப்பே எழவில்லை. கொரோனா பரவிக்கொண்டிருந்தது வேறு இடம். அதையும் அரசு கண்காணித்துக் கொண்டுதாம் இருந்தது. அதுவே தேவை. பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவோர் மூலமாகதான் கொரோனோ பரவும் அபாயம் அதிக அளவு உள்ளது என்பதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. இதன் வெளிப்பாடாகதான் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியுள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் என மொத்தம் 15 லட்சம் பேர், அவரவர் வீடுகளிலோ, மருத்துவமனைகளிலோ தனிமைப்படுத்தப்பட்டு 14 நாள்கள் முதல் 28 நாள்கள் வரை கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் மட்டுமே கொரோனா பரவிக் கொண்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுபோன்று கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பிய பல்லாயிரக்கணக்கானோர், அவர்களுடன் தொடர்பில் இருந்த ஆயிரக்கணக்கானோர் என மொத்தம் 60 ஆயிரம் பேர் மருத்துவர்களின் தற்போது கண்காணிப்பில் உள்ளனர். முதன்மையாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா அறிகுறி இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் பேர், தங்களின் தனிமைப்படுத்துதல் நடைமுறையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். அவர்களிடம் மட்டுமே கொரோனா பரவிக் கொண்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் மொத்தமுள்ள 720க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 274 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு மாவட்டங்களாக நடுவண் அரசால் அண்மையில் அடையாளம் காணப்பட்டு, அந்த மாவட்டத்துக்குட்பட்ட எச்சரிக்கைப் பகுதிகள் முத்திரை வைக்கப்பட்டு காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்களையும், கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவோர் வசிக்கும் பகுதிகளையும் தனிமைப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டியதன் கட்டாயம் என்ன? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. மூன்றாவதாக, தமிழகத்தில் ஆறாயிரம் பேர் உட்பட மொத்தம் நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இதுவரை கொரோனாவை உறுதிசெய்வதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களில் இந்திய அளவில் 5,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்வது சாத்தியமில்லை. நுண்ணுயிரி அறிகுறி உள்ளவர்கள் மருத்துவர்களை உடனடியாக அணுகினால் அவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதால், பெரிதாக என்ன மாற்றம் ஏற்பட்டுவிட போகிறது என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. பொதுமக்களின் உயிர் தொடர்பான விசயம் என்று சொன்னாலும் ஊரடங்கால் தடுக்கப்பட்ட மக்கள். ஊரடங்கின் பாதிப்பாலேயே 22பேருகள் வரை மரணம் அடைந்துள்ளனர். நடுவண், மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவால் நாட்டின் பெருவாரியாக உள்ள அன்றாடக்கூலிகளின் வாழ்வாதாரத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஊரடங்கு உத்தரவை முழுமையாக நீட்டிப்பதைவிட, இதுநாள்வரை கொரோனா தொற்று பாதிக்கப்படாத மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தலாம் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ், தொலைக்காட்சிக்கு இன்று அளித்துள்ள பேட்டியில் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



