கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அன்றாடம் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட நலங்குத்துறையின் நடவடிக்கைகள் குறித்து அதன் செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அறிவிக்கிறார். 27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் நலங்குத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்த கொரோனா நிலவரம்:- இன்று வரை கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 834பேர்கள். தமிழகத்தில் கரோனா நடவடிக்கையில் இதுவரை வீட்டுக்கண்காணிப்பில் உள்ளவர்கள் 60,739 பேர்கள். 28 நாள் கண்காணிப்பை முடித்தவர்கள் எண்ணிக்கை 32,075பேர்கள். ஒரே குழுவாக டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் எண்ணிக்கை 1,480. அவர்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 763 ஆகும். மொத்தம் 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டது தெரிய வந்தால் உடனடி தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். புதிய சோதனை கருவி மூலம் 33 நிமிடங்களில் முடிவு தெரியும். கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



