தமிழர்களில் எண்பது விழுக்காட்டினர்- சொந்தமோ, வாடகையோ, வீட்டு வசதி வாரியக் குடியிருப்போ, சமத்துவபுரக் குடியிருப்போ, வீடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இது கடந்த ஐம்பத்து ஐந்து ஆண்டுகால திராவிட இயக்கத்தின் சாதனை. 14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழர்களில் எண்பது விழுக்காட்டினர்- சொந்தமோ, வாடகையோ, வீட்டு வசதி வாரியக் குடியிருப்போ, சமத்துவபுரக் குடியிருப்போ, வீடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இது கடந்த ஐம்பத்து ஐந்து ஆண்டுகால திராவிட இயக்கதின் சாதனை. வட இந்தியர்களில் வீடற்றோர் மிகக் பெரும்பான்மையோர்கள் ஆவர். அவர்களில் வேலைத் தளங்களில், கூடாரங்களில், தெருவோரங்களில், பணக்கார வீடுகளின் முற்றங்களில், தொடர்வண்டி பயணப் பாதையோரங்களில், ஆற்றங்கரையோரங்களில், தெருவோரங்களில், தொடர்வண்டி நடைபாதைகளில், பழுதான தொடர்வண்டிப் பெட்டிகளில், கோயிலோரங்களில் வசித்து வருகின்றனர். இது வடஇந்தியாவை ஆண்ட காங்கிரஸ், ஆண்டுகொண்டிருக்கும் பாஜகவின் சாதனையாகும். இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து- நேற்றைய காங்ரசும் சரி, இன்றைய பாஜகவும் சரி நேற்று வடஇந்திய மக்களின் ஹிந்தி மொழிக்கான அதிகாரத்திற்கும், இன்று அதனுடன் சேர்த்து ஹிந்துத்துவா அதிகாரத்திற்குமே ஆட்சியைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஆனால் வடஇந்திய மக்களின் கல்வி, தொழில், வணிகம், வங்கி, தொலைதொடர்புத்துறை ஆகியவற்;றில் அவர்களின் வாழ்மானத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் செய்;யவில்லை. குறிப்பிட்டாற் போல பத்து இருபது பணக்காரர்களின் வாழ்மானமே இரண்டு கட்சிகளுக்குமான இலக்காக இருந்து வந்திருக்கிறது. வடஇந்தியாவில் இந்த பத்து இருபது பணக்காரர்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள், நடிகை நடிகர்கள், அத்துறை சார்ந்த கலைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே வாழ்க்கை. மற்றவர்கள் அனைவருக்கும் பிழைப்புதாம். குறிப்பாக சீனா உள்ளிட்ட அன்னிய நாட்டு உற்பத்திகள் இந்தியாவை ஆக்கிரமித்திருப்பதற்கு இந்த இரண்டு கட்சிகளே காரணம். சீன உற்பத்திதான் இந்தியாவின் பேரடையாளம் என்று காட்டும் முகமாக அண்மையில் பாஜக வாங்கிய சீன உற்பத்தி- உலகின் மாஉயரச்சிலையான படேல் சிலை. உள்நாட்டு மக்களுக்கு வாழ்மானம் ஏற்படுத்தித் தராமல்- பத்து இருபது பணக்காரர்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள், நடிகை நடிகர்கள், அத்துறை சார்ந்த கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் பெற்றிருக்கிற வாழ்மானத்திற்கு இவர்களை உணர்ச்சி தளத்தில் தொடர்ந்து கொடி பிடிக்க வைத்துதாம் காரணம். லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததையடுத்து ஸொமாட்டோ நிறுவனத்தில் அதன் சீன முதலீடுகளை எதிர்த்து ஊழியர்கள் சிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது நிறுவன டி-சர்ட்களை எரித்தும் கிழித்தும் போராட்டம் நடத்தினர். கொல்கத்தாவில் நடந்த இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட சில ஊழியர்கள் சீன முதலீட்டை எதிர்த்து வேலையைத் துறந்ததாக தெரிவித்தனர். மேலும் மக்களும் சொமாட்டோ மூலம் உணவுகளை கேட்பு செய்ய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களை வலியுறுத்தினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீன இயங்கலையில் முதன்மை நிறுவனமான அலிபாபாவின் கிளை நிறுவனமான ஆண்ட் பைனான்சியல் 210 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சொமாட்டோவில் முதலீடு செய்தது. அண்மையில் மீண்டும் ஒரு 150 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்டது ஆன்ட் பைனான்சியல். “சீன நிறுவனங்கள் நம்மை வைத்து சம்பாதிக்கின்றனர், நம் ராணுவ வீரர்க்ளையே கொல்கின்றனர். நம் நிலப்பகுதியை ஆக்ரமிக்கின்றனர், இதனை அனுமதிக்க முடியாது” என்கிறார் சொமாட்டோ ஊழியர் ஒருவர். மேலும் இன்னொரு ஊழியர், “பட்டினி கிடப்பதற்கும் தயார், சீன முதலீடு கொண்ட நிறுவனங்களில் பணியாற்ற விரும்பவில்லை” என்றார். இந்த உணர்ச்சிகள்- காங்கிரஸ், பாஜக வளர்த்துக் கொண்டிருக்கும் பத்து இருபது பணக்காரர்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள், நடிகை நடிகர்கள், அத்துறை சார்ந்த கலைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கு மட்டுந்தாம் மீண்டும் மீண்டும் பயன்பட முடியும் என்றால்- வடஇந்திய மக்கள்தாம் சிந்திக்க வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



