காவல்துறையினர் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கொத்தனாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுவும் தூத்துக்குடியில்தான். 14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் கணேசமூர்த்தி (அகவை 26). கொத்தனார். இவருக்கு ராமலட்சுமி (21) என்ற மனைவியும், காளிதாஸ் (3) என்ற மகனும் உள்ளனர். நிகழ்வன்று கணேசமூர்த்தி வேலை குறித்து, தனது மோட்டார் சைக்கிளில் எட்டயபுரம் மேலவாசல் பகுதியில் சென்;று கொண்டிருந்தபோது, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த எட்டயபுரம் காவல்துறையினர் கணேசமூர்த்தியிடம் விசாரித்தபோது- சோற்றுக்கு வழியில்லாமல் கொரோனா என்ன ஊரடங்கு என்ன என்று அவர் விவாதித்;ததால் காவல்துறையினர் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கணேசமூர்த்தி எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வேலைக்கும் வழியில்லை, சோற்றுக்கும் வழியில்லை இதில் அடி உதை வேறா என்று மனமுடைந்த கணேசமூர்த்தி முந்தா நாள் இரவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, கணேசமூர்த்தி தனது சாவுக்கு போலீசார் தான் காரணம் என குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கணேசமூர்த்தியின் சாவுக்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று காலையில் எட்டயபுரம் வட்டாட்சிஅலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எட்டயபுரம் வட்டாட்சி அலுவலகத்தில், கோவில்பட்டி உதவி மாவட்ட ஆட்சியர் விஜயா தலைமையில் சமாதான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. சின்னப்பன் சட்டமன்ற உறுப்பினர் துணை காவல்; துறை கண்காணிப்பாளர்கள் பீர் முகைதீன் (விளாத்திகுளம்), ரவிச்சந்திரன் (மணியாச்சி), வட்டாட்சியர் அழகர், பசும்பொன் முன்னேற்ற கழக தலைவர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிகாரிகள் கூறுகையில், கணேசமூர்த்தியின் மனைவி இராமலட்சுமிக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க ஏற்பாடு செய்வதாகவும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது துறை அடிப்படையான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து கணேசமூர்த்தியின் குடும்பத்தினரிடம் ரூ.4 லட்சம் நிவாரண நிதியை சின்னப்பன் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் கணேசமூர்த்தியின் உடலை குடும்பத்தினர் பெற்று சென்று, இறுதிச்சடங்கு நடத்தி தகனம் செய்தனர். நிவாரணம் இல்லாத அரசின் அதிகார ஊரடங்கை, நடைமுறைப்படுத்த காவல்துறையினர் வழக்கம் போல தங்கள் அடாவடியைப் பயன்படுத்துகின்றனர். நேற்றுவரை காவல்துறையினரின் அடாவடிகளுக்கு பணிந்து போய்க் கொண்டிருந்த பொதுமக்கள், ஊரடங்கின் பாதிப்பில் சம்பளத்திற்கும் சோற்றுக்குமான வழி அடைக்கப்பட்டதால், வேறு வழியில்லாமல், காவல்துறையினரை எதிர்த்துப் போராடுகிறார்கள். இதுவரை இதுபோன்ற எதிர்ப்பை மக்களிடமிருந்து எதிர்பார்க்காத காவல்துறையினர், தங்கள் கடுமையைக் கூடுதல் ஆக்குகிறார்கள். விளைவு இதுபோன்ற மரணங்கள். சிக்கல் எங்கேயிருக்கிறது? சிந்திக்க வேண்டும் அரசும் நியாய அமைப்புகளும்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் காவல்துறையினர் விரைந்து சென்று, கணேசமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடறகூறு ஆய்வுக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



