கங்கை ஆற்றில் ஏராளமான உடல்கள் சிதைந்த நிலையில் தொடர்ந்து மிதந்து வருகின்றன. செய்தியாளர் ஒருவர் நான்கு மணி நேர படகு பயணத்தில் கண்ட காட்சிகளை அதிர்ச்சியுடன் விவரித்துள்ளார். 01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கங்கை ஆற்றில் ஏராளமான உடல்கள் சிதைந்த நிலையில் தொடர்ந்து மிதந்து வருகின்றன. செய்தியாளர் ஒருவர் நான்கு மணி நேர படகு பயணத்தில் கண்ட காட்சிகளை அதிர்ச்சியுடன் விவரித்துள்ளார். ஒரு பேரறிமுக ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் படகில் காசிப்பூரிலிருந்து பீகாரின் பக்சர் வரை பயணம் செய்தார், இது ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை போடுகிறார்களா அல்லது எப்படி ஆற்றில் உடல்கள் மிதக்கின்றன என்பதைக் கண்டறியும் முயற்சியாக இப்பயணத்தை மேற்கொண்டார். அங்கு அவர் பார்த்த காட்சிகள் மிகவும் அதிர்ச்சிகரமானவை. ஏராளமான உடல்கள் மிதந்துள்ளன. அவற்றை எல்லாம் யார் போட்டிருப்பார்கள் என்று திகைத்துபோனார். புகைப்படக்காரர்கள் தங்கள் படக்கருவிகள் மூலம் உடல்களை படம் பிடிப்பதை பார்த்த உள்ளூர் நிர்வாகம் மூன்று சடலங்களை ஆற்றில் இருந்து வெளியேற்றியது. உடல்களை ஆற்றில் இருந்து வெளியே எடுத்துக்கொண்டிருந்த பணியாளர்கள் எந்த விதமான பாதுகாப்பு உடைகளையும் அணியவில்லை. செய்தியாளரிடம் ஒருவர் கூறுகையில், நீங்கள் உன்னிப்பாக கவனித்தால், அற்றில் வரும் அனைத்து உடல்களும் இந்த திசையை நோக்கி பாய்கின்றன. இந்த உடல்கள் இங்குள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது என்பது உண்மையல்ல. இந்த உடல்கள் மற்ற இடங்களிலிருந்து மிதந்து இங்கு வருகின்றன என்றார். உடல்கள் எங்கிருந்து வருகின்றன என்று செய்தியாளர் கேட்டார். அதற்கு அவர், மக்கள் பிரயாகராஜிலிருந்து (அலகாபாத்) உடல்களைக் கொட்டுகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம், அவைகள்தாம் ஆற்றில் மிதக்கின்றன. உடல்கள் காற்றின் திசையில் பின்தொடர்கின்றன என்றார். இதனிடையே காசிப்பூரில் ரோந்து குழுக்கள், உடல்களை ஆற்றில் போடக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தன. அக்குழுவினர் இதுபற்றி கூறுகையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். யாருக்கும் எந்த சிக்கலும் ஏற்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் கிராமங்களில் மக்களிடம் கருத்துப் பரப்புதல் செய்து வருகிறோம். கிராம மக்கள் ஏற்கனவே பல வாழ்வாதாரச் சிக்கல்களில் உள்ளனர். அவர்கள் இந்த புதிய சிக்கல்களில் இருந்து விடுவிக்க நாங்கள் விரும்புகிறோம் என்றார்கள். செய்தியாளர் காசிப்பூரிலிருந்து நவுபத்பூர் வரை பயணித்தார். அவர் செல்லும் வழியில், கரைகளில் பார்த்து வெறும் முன்னோட்டக் காட்சி மட்டுமே என்று தெரிந்தது. ஆற்றிற்குள் ஏராளமான உடல்கள் மிதந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏறக்குறைய ஒவ்வொரு வளைவிலும் பாறைகளில் சிக்கிய ஒரு உடல் இருந்திருக்கிறது. படகு ஆற்றின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் பயணித்தபோது, நிலைமை மிகவும் கொடூரமாக இருந்தது. காகங்களும், நாய்களும் சடலங்களை தின்று கொண்டிருந்தன பயணத்தில் சில மணிநேரங்களிலேயே, ஆற்றில் உடல்களின் எண்ணிக்கை அவரால் எண்ணவே முடியவில்லை என்று விக்கித்துப் போனார். இப்போது அதிகமாக மிதக்கிறது உடல்கள் அதிக அளவு மிதப்பது குறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில். இரவைப் பயன்படுத்தி, தொலைதூர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உடல்களை நேராக ஆற்றில் போடுகிறார்கள். கங்கை ஆறு ஹரித்வார் வழியாக பாய்ந்து பீகாருக்கு வருகிறது. பல பகுதிகளில் போடப்படும் உடல் ஆற்றின் வேகம் காரணமாக உடல்கள் காசிப்பூர் மாவட்டத்தில் வந்து கரை ஒதுங்குகின்றன. என்று தெரிவிக்கின்றனர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அடிப்படையான தூய்மை, நலங்கு, சமூக நலம் குறித்த அறிவில்லாத வட இந்தியா சமூகத்தால்தாம், நீட் என்கிற மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு- இந்தத் துறையில் வளமான அறிவு பெற்ற தமிழ்ச் சமூத்தின் மீது திணிக்கப்படுகிறது என்கிற கொடுமையாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.