Show all

கொரோனா பாதிப்பை கண்டறியும் எளியவகை கருவி இந்தியாவில் அறிமுகம்! ஆனால் விலை எளிமைக்கானதாக இல்லை

கொரோனா பாதிப்பை கண்டறியும் எளியவகைக் கருவியை, இந்தியத் தொழில்நுட்பக்கழகம் டெல்லி கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருவி வணிகத்திற்கு இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

01,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பாதிப்பைக் கண்டறியும் எளியவகைப் பரிசோதனைக் கருவியை தயாரிக்கும் முயற்சியில் இந்தியத் தொழில்நுட்பக்கழகம் டெல்லி ஈடுபட்டது. இது வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.  இதன் அடிப்படை விலை ரூ.399 ஆக இருக்கும் என்று இந்தியத் தொழில்நுட்பக்கழகம் டெல்லி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வக கட்டணங்களையும் சேர்த்து இதன் விலை ரூ.650 ஆக இருக்கும் எனவும் தற்போது கிடைக்கும் பரிசோதனை கருவிகளில் குறைந்த விலையே என்றும் இந்தியத் தொழில்நுட்பக்கழகம் டெல்லி தெரிவித்துள்ளது. இந்தப் பரிசோதனை கருவிக்கு  ‘கோரோசூர்’ என்று பெயரிட்டுள்ளது. இந்தக் கருவிகள் மூலம், கொரோனா தொற்று முடிவுகளை மூன்று மணி நேரத்தில் துல்லியமாக பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.