Show all

சித்த மருத்துவத்தின் சாதனை! மூன்றே நாளில் குணமான கொரோனா நோயாளி

மூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம். அதிகபட்சம் ஒற்றைக் கிழமையில் குணமளிக்க முடியும் என்று மருத்துவர்கள் உறுதி

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

இங்கு பெரும்பாலானோர் அரசு மருத்துமனைகளில் அல்லோபதி மருத்துவம் பெற்றுவரும் நிலையில், பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில் சித்த வைத்திய முறைப்படி நோயாளிகளைக் குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் தற்போது 51 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவருக்கு அடுத்த மூன்றே நாட்களில் மறு பரிசோதனை செய்த போது கொரோனாவிலிருந்து குணமாகி இருந்தார். இதையடுத்து அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.  

சித்த மருத்துவத்தின் மூலம் மூன்றே நாளில் ஒருவருக்கு குணமடைந்ததில் மகிழ்ச்சி எனவும் இது எங்களுக்கு மேலும் உற்சாகம் கொடுக்கிறது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

முதலில் காலையில் மஞ்சள்தூள், உப்பு இவற்றை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டை சுத்தமாகும். கிருமி ஒழிக்கப்படுகிறது. இரண்டாவதாக சித்த மருத்துவ ஓகஇருக்கைப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மூன்றாவதாக சிற்றுண்டிக்கு பிறகு கபசுரக் குடிநீர் மற்றும் சித்த மருந்துகளாக இஞ்சிச்சாறு தேன் கொடுக்கப்படுகிறது. நான்காவதாக 11 மணிக்கு சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், மஞ்சள் மர மஞ்சள் சேர்த்து மூலிகை தேனீர் கொடுக்கப்படுகிறது.

சுpத்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதுடன் நோய் அறிகுறிகளை முழுவதுமாக குறைக்கிறது. ஐந்தாவதாக மதியம் வழக்கமாக சைவ சாப்பாடு கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கு தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் தவிர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்து அவர்கள் மாலை சூப் மற்றும் சுண்டல் கொடுக்கப்படுகிறது. இரவு உணவுக்குப்பின் கபசுரக் குடிநீர் மற்றும் உப்பு மஞ்சள் தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலமே இவர்கள் மூன்று நாளில் குணமாக்கப்படுகிறார்கள்.

சிலரின் நோயின் வீரியத்தை பொறுத்து மேலும் சில நாட்கள் தள்ளிப் போகிறது. எப்படி இருந்தாலும் ஒற்றைக் கிழமையில் கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.