மக்களுக்குத் தேவை கொரோனா குறித்த புரிதல்! நாம் கொரானா குறித்த அச்சத்தையே விதைத்து, வெறுப்புகளையும், பொறுப்பின்மைகளையும் அறுவடை செய்கிறோம். அரசும், ஊடகங்களும் மக்களின் கொரோனா அச்சத்தைப் போக்குவதற்கு போதுமான அளவு முயலவில்லை என்பதையே, திருச்சியில் அரங்கேறிய இந்த அவலம் நமக்கு உணர்த்துவதாகிறது. 01,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மக்களுக்குத் தேவை கொரோனா குறித்த புரிதல்! நாம் கொரானா குறித்த அச்சத்தையே விதைத்து, வெறுப்புகளையும், பொறுப்பின்மைகளையும் அறுவடை செய்கிறோம். இந்தக் காலகட்டத்தில் இதழ்கள் மற்றும் ஊடகங்களின் பொறுப்பு முதன்மையானது. நம் பழந்தமிழகத்தில் புலவர்கள்;தாம் மக்களையும் மன்னனையும் இணைப்பதிலும், நெறிப்படுத்துவதிலும் முதன்மையாக விளங்கினார்கள். மூவேந்தர்களையும் சந்தித்தார்கள். பெரும்பாலான புலவர்கள் மருத்துவமும் கணியமும் அறிந்தவர்களாக இருந்தார்கள். அவர்களின் மாறுபட்ட வடிவம் தாம் தற்போதைய இதழ்கள் மற்றும் ஊடகங்கள் ஆகும். ஆனால் இன்றைய இதழ்களும், ஊடகங்களும் மக்;களோடு மக்களாக ஊரடங்கியிருக்கின்றன. பெரும்பாலும் கொரோனா குறித்த புரிதலைவிட அச்சத்தையும், அரசு தரும் புள்ளிவிவரங்களையும், பரப்பிக் கொண்டிருக்கின்றன. அரசும், ஊடகங்களும் மக்களின் கொரோனா அச்சத்தைப் போக்குவதற்கு போதுமான அளவு முயலவில்லை என்பதையே, திருச்சியில் அரங்கேறிய பின்வரும் அவலம் நமக்கு உணர்த்துவதாகிறது. திருச்சி மாவட்டம், துறையூரில் அண்ணன், தம்பி 2 பேர் வெவ்வேறு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இவர்களின் 72 அகவை தாய் இளைய மகன் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த சனிக்கிழமை இளைய மருமகள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இதனால் அந்த மூதாட்டி தனது மூத்த மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்தநிலையில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவந்த மூதாட்டியின் இளைய மருமகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் மூதாட்டியின் இளைய மகன் வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு வந்துவிட்டார். இதையறியாத மூதாட்டி, இளைய மருமகள் வந்திருப்பாள் என்று மூத்தமகன் வீட்டில் இருந்து புறப்பட்டு இளைய மகன் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு வீடு பூட்டி இருந்ததால், அவர் பக்கத்து வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்தார். அவருக்கு அதிகமாக இருமல் இருந்ததுடன், காய்ச்சலும் இருந்ததால், அந்த தெருவில் உள்ளவர்கள், மூதாட்டியை அவருடைய மூத்த மகன் வீட்டிற்கு தானியில் ஏற்றி அனுப்பிவைத்தனர். மூத்த மகன், தனது தாயை செவ்வாய்க் கிழமை இரவு 9 மணிக்கு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு, தற்போது கொரோனா பரிசோதனை செய்ய முடியாது. காலையில் அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர். இதனால், அன்று இரவே, தனது தாயை தம்பி வீட்டு வாசலில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று காலை வீதியில் படுத்து இருந்த அந்த மூதாட்டியைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை, தானியில் ஏற்றி மூத்தமகன் வீட்டுக்கு செல்லும்படி அனுப்பிவைத்தனர். தனது தாயை தம்பி வீட்டருகே விட்டுச் சென்ற கையோடு அன்று இரவே வீட்டை பூட்டிவிட்டு, திருச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதற்கிடையே கொரோனா பீதியில் அந்த மூதாட்டி அங்கு இருக்கக்கூடாது என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த மூதாட்டி நடுத்தெருவில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சிங்களாந்தபுரம் ஊராட்சி தலைவர், அந்த மூதாட்டியை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



