வேலூர் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் எதிரொலிக்கும் என்று நம்பும் அதிமுக: இந்த அமித்சா, 35அ, 370 ரத்து அறிவிப்பை வேலூர் தேர்தல் முடியும் வரை காத்திருந்து இன்று கூட அறிவித்திருக்கலாமே என்று புலம்புவதாக தகவல் வெளியாகி வருகிறது. 21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் நடுவண் அரசு எடுத்திருக்கும் முடிவு, மூன்று லட்சம் இஸ்லாமிய வாக்குகள் கொண்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் எதிரொலித்திருக்கும் என்று பெரும்பாலான அரசியல் நோக்கர்களால் நம்பப் படுகிறது. இஸ்லாமியர்களின் வாக்குகள் பெரும்பான்மையாகக் கிடைக்குமா என நடுநடுங்கிப் போயிருக்கிறார்கள் அதிமுக வேட்பாளர் தரப்பில். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி வழங்க வகை செய்யும் 35அ, 370 ஆகிய சட்டப் பிரிவுகள் ரத்துசெய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் இரண்டாகப்; பிரிக்கப்படும் என்று நடுவண் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலிலும் காஷ்மீர் விவகாரம் பிரதிபலித்திருப்பதால் ஆளுங்கட்சியினர் ஆட்டம் கண்டுள்ளனர். வேலூர் தொகுதியில் மட்டும் 3 லட்சம் இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். இவர்களின் வாக்குகள் யாருக்குப் பெரும்பான்மையாகக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. காஷ்மீர் விவகாரம் குறித்து இஸ்லாமிய வாக்காளர்கள் சிலரிடம் கேட்டபோது நடுவண் அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது. என்றே தெரிவித்தனர். அணைக்கட்டுத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், நடுவண் அரசு எடுக்கும் எல்லா முடிவுகளுமே சிறுபான்மையினருக்கு எதிரானதுதான். வேலூர் தேர்தல் முடிவு அவர்களுக்குப் பாடம் புகட்டும். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் லட்சம் வாக்குகள் வேறுபாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளரைத் தோற்கடிப்பார் என்றார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டீக்காராமன், காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்றுகூறி ஒரு லட்சம் வீரர்களை திடீரென குவித்தார்கள்; உண்மையாகவா... என்று கவனித்த நேரத்தில் நடுவண் அரசின் குட்டு வெளியாகியிருக்கிறது என்றார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,236.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.