27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றால், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஐம்பதாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 100 நாடுகளில், 3,900க்கும் அதிகமான பேரை பலி வாங்கி உள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று. இதுவரை, ஒரு லட்சத்து, 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர், இந்தக் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புனேயில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது உறுதியானது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியை சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



