யானைக்கு பாகன் போல ஒவ்வொரு விலங்குக்கும் மனிதன் மொழியைப் பயிற்றுவிக்க பயிற்சியாளர் தேவைப்படும். ஆனால் நாட்டு நாயுக்கு மட்டும் தனிப்பயிற்சியாளர் தேவையில்லை. சோறு போடுகிற யாருடைய மொழியையும் அது எளிமையாகக் கற்றுக் கொண்டு வாலாட்டும். அண்மையில் கூட நரேந்திர மோடி நாட்டுநாய்கள் குறித்து பெருமையாகப் பாராட்டியிருந்தார். 28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: எம்மொழியும் கற்பேன்டா என்ற முழக்கம் பொறித்த சட்டைகளைத் திருப்பூர் பாஜகவினர் தயாரிப்புக்கு கேட்பு கொடுத்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் காங்கிரஸ்அரசுதான் ஹிந்தித் திணிப்பு முயற்சியில் ஈடுபடும். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எல்லாம் அடக்கம் சொடக்கமாகவே இருப்பார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் பேசத்தெரிந்த ஆட்கள்- ஒன்றிய ஆட்சியில் பாஜக இருப்பதால் குளிர் விட்டுப் போனவர்களாக கொஞ்சம் துள்ளல் வேலையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அரசின் முயற்சிகளுக்கு அவர்களும் முட்டுக் கொடுத்து வருகின்றார்கள். பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பை கையில் எடுத்துள்ள திமுகவினர், திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனத்தினரிடம் இருந்து, ஹிந்தி தெரியாது போடா என்ற முழக்கம் பொறித்த சட்டை தயாரித்து, அணிந்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தமிழ் பேசத் தெரிந்த ஆட்கள், புதிய கல்விக் கொள்கையின் ஹிந்தி திணிப்பு முயற்சிக்கு ஆதரவு தரும் முகமாக சட்டைகளை களமிறக்கியுள்ளனர். தமிழாய்ந்த தமிழனடர் எம்மொழியும் கற்பேன்டர் தடுக்க நீ யாரடா என்ற முழக்கம் பொறித்த சட்டைகளைத் தயாரித்து, அணிவதற்கு ஆட்;கள் தேடி வருகின்றனர். அந்தச் சட்;டைகளைத் திருப்பூர் பகுதிகளில் பாணிபூரி விற்கும் வடஇந்திய இளைஞர்களிடம் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னபோது அவர்கள் மறுத்துவிட்டார்களாம். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நரேன்பாபு என்பவர் கூறுகையில், ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்கட்டமாக, 1,000 சட்டைகள் தயாரிக்க கேட்பு கொடுத்து, வாங்கி வைத்துள்ளோம். எதிர்வரும் வியாழக்கிழமை நரேந்திரமோடி பிறந்தநாள். அன்று அணிவதற்கு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்சியினரைத் தொடர்பு கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



