முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைஅமைச்சர் மோடி, ஆங்கில மொழிபெயர்ப்பாளர் அமர்த்திக் கொள்ளாமல் ஹிந்தியில் பேசுகிறார். ஆனால் எனக்கு ஹிந்தி தெரியாததால், அங்கு பேசப்பட்ட செய்தியின், ஒற்றை சொல்லின் பொருளும் விளங்கவில்லை என்று மிசோரம் முதல்வர் சொரம்தங்கா தெரிவித்துள்ளார். 16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வட இந்தியா முழுக்க ஹிந்தியே பேசுவது போல, காங்கிரஸ் காலத்திலிருந்தே, வடஇந்திய அரசியல் தலைவர்களால் பம்மாத்துக் காட்டப்பட்டு வருகிறது. அந்த நிழல்தோற்றத்தை ஒளிபாய்ச்சி அம்பலப்படுத்தியுள்ளார் மிசோரம் முதல்வர் சொரம்தங்கா. முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைஅமைச்சர் மோடி, ஆங்கில மொழிபெயர்ப்பாளர் அமர்த்திக் கொள்ளாமல் ஹிந்தியில் பேசுகிறார். ஆனால் எனக்கு ஹிந்தி தெரியாததால், அங்கு பேசப்பட்ட செய்தியின், ஒற்றை சொல்லின் பொருளும் விளங்கவில்லை என்று மிசோரம் முதல்வர் சொரம்தங்கா தெரிவித்துள்ளார். வழக்கமாக மக்கள் முன் உரையாடும்போதும், அரசியல் தலைவர்களுடன் உரையாடும்போதும் தலைமைஅமைச்சர் மோடி ஆங்கில மொழிபெயர்ப்பாளர் வைத்துக் கொள்ளாமல் ஹிந்தியிலேயே பேசி வருவதை வழக்கமாகக் கொண்டுவருகிறார். அந்த வகையில் ஊரடங்கு குறித்து பேசும்போதும் கூட மக்கள் நடுவே ஹிந்தியில்தான் பேசினார். மோடியின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பிலும் விமர்சனங்களைப் பெற்றது. நாடே இக்கட்டான நிலையில் உள்ளபோது எடுக்கப்பட்டுள்ள முதன்மையான ஒரு முடிவைக் குறித்து மக்களிடம் பேசும்போது அனைவருக்கும் சென்றடையும் வகையில் தலைமைஅமைச்சர் பேச வேண்டும் எனக் கருத்துகள் எழுந்தன. குறைந்தபட்சம் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஒருவரையாவது மோடி அருகில் வைத்துக்கொண்டு பேச வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் முந்தாநாள் நடைபெற்ற கூட்டத்தில், முதல்வர்களிடம் பேசிய தலைமைஅமைச்சர் மோடி, ஹிந்தி மொழியிலேயே பேசியுள்ளார். இந்தக் கூட்டம் முடிந்து, இதுகுறித்து பேசிய மிசோரம் முதல்வர் சொரம்தங்கா, ஹிந்தியில் பேசுகிறார்கள் என்பதால், அங்குள்ளவர்கள் சொன்ன ஒரு சொல் கூட எனக்குப் புரியவில்லை எனத் தெரிவித்தார். தலைமைஅமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கெரோனா பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும், மக்கள் விலைகொடுப்பில், நடுவண் அரசின் நிவாரணம் ஏதுமில்லாத அதிகாரப்பாட்டு ஊரடங்கு 20,சித்திரை வரை (மே3) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் தங்களால் முடிந்த சிறு நிவாரணம் வழங்கி ஊரடங்கை காவல்துறை மூலம் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்தப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமைஅமைச்சர் மோடி முந்தாநாள் முதல்வர்கள் உடனான கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மிசோரம் முதல்வர் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



