டெல்லியில் கூட்டணிக்காக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசுக்கு இடையிலானப் பேச்சுவார்த்தை தோல்வியுற்றாலும், மூன்று தொகுதிகளை ஆம் ஆத்மிக்கு விட்டுக் கொடுக்கவும் 4 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தவும் ராகுல் காந்தி ஆலோசனை செய்வதாகக் கூறப்படுகிறது.
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி அமையவில்லை.
இந்நிலையில், டெல்லியின் ஏழு தொகுதிகளில் நிலவும் மும்முனைப் போட்டியை தவிர்க்கவும், அதனால் பாஜக பலன் பெறுவதை தடுக்கவும், ஆம் ஆத்மிக்கு ஆதரவாக மூன்று தொகுதிகளில் மட்டும் வேட்பாளரை நிறுத்தாமல் விட்டு விடுவது என காங்கிரஸ் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, 'முன்னாள் நடுவண் அமைச்சர்களில் கபில்சிபல் சாந்தினி சவுக்கிலும், புதுடெல்லியில் அஜய்மக்கனும், கிழக்கு டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், வடமேற்கு டெல்லியில் ராஜ்குமார் சவுகானும் தேர்வு செய்து வைக்கபட்டுள்ளனர். மீதம் உள்ள மூன்றில் காங்கிரஸ் ஒதுங்கி இருக்க வாய்ப்புகள் உள்ளன.' எனத் தெரிவித்தனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,120.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.