Show all

சாய்பல்லவி களறி கற்று வருகிறார்! களறி சண்டை கற்றுத்தரும் பெண்ணாக நடிக்க. படம்-அதிரன். மொழி- மலையாளம்

அதிரன் படத்திற்காக பிரபல நடிகை சாய் பல்லவி களறி சண்டையை கற்று வருகிறார். சும்மா படக்கருவிக்கு காட்சிதருவதில் எனக்கு விருப்பம் கிடையாது. அப்படி விரும்பும் இயக்குனர்களிடமும் நான் பணியாற்றுவது கிடையாது என்கிறார் சாய் பல்லவி. அடேங்கப்பா!
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி.
அண்மையில் இவர் நடிப்பில் தமிழில் வெளியான படம் 'மாரி 2'. இந்தப் படத்தில் இவர் தனுசுடன் கதைத்தலைவியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இவரும், தனுசும் ஆடிய, ரவுடி பேபி பாடல் பல சாதனைகளை படைத்துள்ளது.
தற்போது மீண்டும் மலையாளத்துக்கு சென்றுவிட்டார் சாய் பல்லவி. அங்கு 'அதிரன்' படத்தில் பஹத் பாசிலுக்கு கதைத்தலைவியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் பஹத் பாசில் மனோதத்துவ நிபுணராக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி களறி சண்டை கற்றுத்தரும் பெண்ணாக நடிக்கிறார். தற்போது அதற்காக உண்மையிலேயே களறி சண்டையை முறைப்படி கற்று வருகிறார்.
அவர் சண்டை கற்கும் போது எடுத்த காணொளி அண்;மையில் வெளியிடப்பட்டது. அதில் வெறித்தனமாக களறி சண்டை போடுகிறார் சாய் பல்லவி. 'கதாபாத்திரத்தை உணர்ந்து அதில் மெய்மறந்து நடிப்பது எனது பாணி. களறி சண்டை போடுவதாக சும்மா படக்கருவிக்கு காட்சிதருவதில் எனக்கு விருப்பம் கிடையாது. அப்படி விரும்பும் இயக்குனர்களிடமும் நான் பணியாற்றுவது கிடையாது என்கிறார் சாய் பல்லவி.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,120.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.