வருமான வரித்துறை மூட்டிய நெருப்பாற்றில்- நெய்வேலியிலிருந்து சென்னை கானத்தூர் வரை நீந்தி கரை மீண்டு நிமிர்ந்து நிற்கிறார் விஜய். வரலாற்றிலும் இவருடைய வாகை பதிவாகிறது. வாழ்த்துகிறோம் விஜய்! ஆயிரம் ஆயிரம் அரசியல் அதிரடிகளையும் அடித்து நொருக்கியிருக்கின்றீர்கள் ஓங்கி ஒலிக்கிறோம் நீங்கள் தந்த பிகில் மூலம் பல்லாண்டு வாழ்கவென உங்களை வாழ்த்தி! 24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது நல்லது தான் என்கிறார்கள் ரசிகர்கள். பிகில் படத்து இலாபத்தை உரிய முறையில் வருமான வரித்துறைக்கு பகிரவில்லை என்பதாக, பிகில் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், அந்த படத்தின் நிதிநிறுவனர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள், விஜய் வீடு உள்பட 38 இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனை நடத்தினார்கள். ஆனால் அந்த சோதனையில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சோதனை நடந்தது நல்லது என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். புலி படத்தில், எங்கள் புலி வேதாளனாக நெருப்பில் நீந்தி வந்தாரே அதைப்போலவே, வருமான வரித்துறை மூட்டிய நெருப்பாற்றில்- நெய்வேலியிலிருந்து சென்னை கானத்தூர் வரை நீந்தி கரை மீண்டு நிமிர்ந்து நிற்கிறார் விஜய். பத்தரைமாற்றுத் தங்கமாக விஜய் அவர்களைப் புடம் போட்டு இருக்கிறது வருமான வரித்துறை என்கின்றார்கள் விஜய் இரசிகர்கள். முன்னதாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறித்து அஜித் கூறியது தற்போது தீயாகியுள்ளது. அதாவது வீட்டில் வைத்த பொருட்கள் பாதி எங்கே வைத்தோம் என்பது தெரியாமல் இருந்தது. வருமான வரித்துறை சோதனையில் காணாமல் போன பொருட்கள் அத்தனையும் மீண்டும் கிடைத்துவிட்டன. இதனால் மகிழ்ச்சி அடைகிறேனே தவிர எனக்கு எந்தவித அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மேலும் நான் முறைதவறி எதையும் வீட்டில் வைத்திருக்கவில்லை என்று அஜித் தெரிவித்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிர்வு செய்யப்படுகிறது. அஜித் சொன்னது போன்று விஜய் வீட்டில் எங்கே வைத்தோம் என்று தெரியாமல் இருந்த பொருட்கள் அத்தனையும் மீண்டும் கிடைத்திருக்கும். இதனால் சங்கீதா அண்ணி மகிழ்ச்சியில் இருப்பார். மேலும் கணக்கில் வராத பணம் எதுவும் கிடைக்காததால் விஜய் முறையாக வரி செலுத்துகிறார் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இதுதவிர பிகில் படம் ரூ. 300 கோடி வசூல் செய்தது என்பதும் உறுதியாகியுள்ளது. அதனால் சோதனை நடந்தது நல்லதே என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்த நிலையில் விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை குறித்து கீச்சு பதிவிட்டு எச்.இராசா மகிழ்ந்துள்ள நிலையில்- அடப்பாவி நீங்கள் செய்த வேலைதானா? அதுதான் தமிழன் தெறிக்க விட்டுவிட்டாரே என்றும் ஒன்றிய பாஜக அரசின் சில்லுண்டித்தனத்தை முறிடித்ததையும் கொண்டாடி மகிழ்கிறார்கள் விஜய் இரசிகர்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



