Show all

பாராளுமன்றத்தில் பரபரப்பு கிளப்பிய தமிழக உறுப்பினர்! நடந்தது என்ன

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், காரசார விவாதம் ஒன்றின் போது தமிழக பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர், ஒன்றிய பாஜக அமைச்சர் ஹர்சவர்தனை நோக்கி வேகமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், காரசார விவாதம் ஒன்றின் போது தமிழக பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர், ஒன்றிய பாஜக அமைச்சர் ஹர்சவர்தனை நோக்கி வேகமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய இளைஞர்கள் இன்னும் ஆறு மாதங்களில் தலைமைஅமைச்சர் மோடியைத் தடியை கொண்டு அடிப்பார்கள் என்று, டெல்லியில் நடைபெற்ற தேர்தல் கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியிருந்தாராம்.  அவரின் அந்தப் பேச்சுக்கு இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் ஒன்றிய பாஜக அமைச்சர் ஹர்சவர்தன் கண்டனம் தெரிவித்தார். 

இதற்கு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கூச்சலிட்டனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர்- ஒன்றிய பாஜக அமைச்சர் ஹர்சவர்தன் இருக்கையின் அருகே வேகமாக சென்றார். 

அதிர்ச்சி அடைந்த பாஜக உறுப்பினர்கள் ஒன்றிய பாஜக அமைச்சர் ஹர்சவர்தனைச் சூழ்ந்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கடும் அமளியால் பேரவைத்தலைவர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.