1.பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை 2.பாஜகவின் வட இந்தியத் தலைமை வேலையாக இருப்பதால் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 3.ஜே.பி.நட்டா தமிழகம் வரும் போது அனைத்து குழப்பங்களும் தீரும் என தெரிவித்துள்ளார் அண்ணாமலை, 05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு அவர் தனது தேர்தல் கருத்துப்பரப்புதலைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையில், நேற்றுசெய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழகக் கிளையின் தலைவர் எல்.முருகன், ‘தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று கூட்டணியில் குறுக்குச்சால் ஓட்டினார். மேலும், தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் பாஜகவின் வட இந்தியத் தலைமைதான் முடிவு செய்யும்’ என தெரிவித்தார். பாஜகவின் வட இந்தியத் தலைமை வேலையாக இருப்பதால், அடாவடியாக அதிமுக கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்ட பாஜக- தமிழ்நாட்டின் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பாஜகவின் தமிழகக் கிளையின் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தப் பாடு தற்போது பாஜக தமிழகக் கிளையில், உட்கட்சிப் பூசலை உருவாக்கியுள்ள நிலையில், அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி இன்று கூறுகையில், பாஜக தலைவர் எல். முருகன் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்றும், கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எல்.முருகன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் பாஜக தலைமை அவரை நீக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால், அதிமுக-பாஜக கூட்டணி இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜகவின் தமிழகக் கிளையின் துணை தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- 1.பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை 2.பாஜகவின் வட இந்தியத் தலைமை வேலையாக இருப்பதால் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 3.ஜே.பி.நட்டா தமிழகம் வரும் போது அனைத்து குழப்பங்களும் தீரும் என தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



