இந்தியாவிலுள்ள மற்ற நகரங்களை விடவும் சென்னையில் நான்காம் தலைமுறை இணைப்பு அதிவேகமாகத் தரவிறக்கம் செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐம்பது இந்திய நகரங்களில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்புக்கான நான்காம் தலைமுறை காணொளி தரவிறக்க நேரம் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நான்காம் தலைமுறை இணைப்பின் வழியாக ஒரு காணொளி எவ்வளவு சீக்கிரமாக தரவிறக்கம் ஆகிறது என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. லண்டனின் ஓபன் சிக்னல் என்கிற செல்பேசி நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதில் மற்ற நகரங்களைப் பின்னுக்குத் தள்ளி சென்னை முதலாம் இடத்தைப் பிடித்தது. ஆம்! 6 நொடிகளில் சென்னையில் நான்காம் தலைமுறை இணைப்பில் காணொளி செயல்பட தொடங்கியதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 2-வது இடம் கொல்கத்தாவுக்குக் (6.2 நொடி) கிடைத்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,149.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.