Show all

டெல்லி வன்முறை! முழுமையான தீர்வுக்குத் தேவை- ஆளும்பாஜக அரசிடம் மதநேயத்திலிருந்து, மனிதநேயத்திற்கு என்கிற மனமாற்றம்

டெல்லியில் நடக்கும் அமைதிப் போரட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாத பாஜகவினரில் சிலரின் தூண்டுதல் முயற்சியில், போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது நிரந்தரத் தீர்வுக்கு- பாஜக அரசிடம் மதநேயத்திலிருந்து, மனிதநேயத்திற்கு மாற வேண்டிய மனமாற்றம் தேவை.

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகினரில் எப்போதும் மொழி அடையாளத்தையே முதன்மைப்படுத்தும் மரபினரான தமிழர்கள்- பல்லாயிரம் ஆண்டுகளாக மொழிக்கு இலக்கணம் (காப்பியம்) போல, வாழ்க்கைக்கும் காப்பியத்தை- (இலக்கணம்) வாழ்ந்த அனுபவங்களில் இருந்து கட்டமைத்து அந்த அடிப்படையில் வாழும் மரபினர் ஆவர்.

பாஜக விரும்பும் மதநேயம் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை. ஊழல் இல்லாத மனிதநேயம் எங்களுக்கு வேண்டும் என்ற தீர்ப்பை டெல்லி மக்கள் சட்டமன்றத் தேர்தல் மூலமாக அளித்திருக்கின்றார்கள். இதை உலகமே அறியும்.

அந்த வகையான டெல்லியிலும், இந்த வகையான தமிழகத்தில் வண்ணாரப்பேட்டையிலும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஹிந்துத்துவா நேயத்தில் பாஜக நடுவண் அரசு கொண்டு வந்திருக்கிற குடியுரிமைத் திருத்தச் சட்டம் எங்களுக்கு வேண்டாம் என்பதாக.

டெல்லியில் நடக்கும் அமைதிப் போரட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாத பாஜகவினரில் சிலரின் தூண்டுதல் முயற்சியில், போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எங்களுக்கு நடுவண் பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டம் தேவை என்று மக்கள் விரும்புவது போல காட்ட, மக்களில் மற்றொரு பிரிவினர் நடுவண் பாஜக அரசின் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கல்லெறி முயற்சியில் ஈடுபடுவதாகவும், காவல்துறையினரைத்தாண்டி துப்பாக்கி சூடெல்லாம் நடத்துவது போலவும் போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்கள்.

டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்தில் தான் இந்த வன்முறை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கொடூர வன்முறையில் 13 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். உயிரிழந்தவர்களில் டெல்லி தலைமைக் காவலர் ஒருவரும் அடங்குவார்.

இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டெல்லி காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால் துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’ தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதனால் பல இடங்களில் வன்முறை நிகழ்வுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது, டெல்லி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.