26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க மாட்டோம் என நடுவண் அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என நடுவண் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது. நடுவண் அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதமும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதமும் உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதுதவிர, மாநில அரசுகள் வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியை வசூலிக்கின்றன.. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ஒரு ரூபாய் குறைத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல. நிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும். அதற்கு வருமான வரி, ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை உயர வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தபோதிலும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. எனவே பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று நடுவண் அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,907.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



