Show all

சிக்கினார்கள்! ராணுவ வீரரின் தொலைந்துப்போன அடையாள அட்டையை திரும்பத்தர ரூ.3 லட்சம் பேரம்

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கானாவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் அகவை 24, பஞ்சாப் ராணுவத்தில் பணியாற்றுகிறார். இவர் கடந்த மாதம் காசியாப்பாத்திலிருந்து சார்மினார் விரைவு வண்டி மூலம் சென்னை வந்தார். அப்போது அவரது ராணுவ அடையாள அட்டை, வருமானவரித்துறை அட்டை, கடன்அட்டை உள்ளிட்டவற்றை தவறவிட்டுவிட்டார்.

இதுகுறித்து தொடர்வண்;டி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். காவலர்கள்; வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையே ஹரிகிருஷ்ணனுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர்கள் உங்களது ராணுவ அடையாள அட்டை எங்களிடம் இருக்கிறது. நாங்கள் 3 பேர் ஆளுக்கு ஒரு லட்சம் என 3 லட்சம் தந்தால் ராணுவ அடையாள அட்டை தருவோம் என்று கூறியுள்ளனர்.

இதை காவல்துறையினரிடம் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார். பின்னர் காவலர்கள் ஹரிகிருஷ்ணனுக்கு தாங்கள் கூறியபடி நடக்க சொல்லியுள்ளனர். காவலர்கள் கூறியபடி பேசிய ஹரிகிருஷ்ணன் பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டார். பணத்தை வாங்க செண்ட்ரல் தொடர்வண்டி நிலையம் வரச்சொல்ல அதன்படி பணத்தை வாங்க வந்த 3 நபர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் பெயர் கார்த்திக் ஹரிஜன் அகவை 25, சுக்குரு அகவை 32, தம்பரி ஹரிஜன் அகவை 25 என தெரியவந்தது. மூவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து ராணுவ அடையாள அட்டையை கைப்பற்றி மூவரையும் சிறையில் அடைத்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,869.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.