19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் தினேஷ், அடுத்ததாக 'அண்ணனுக்கு ஜே' என்ற படத்தில் நடித்துள்ளார். வெற்றிமாறன் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில், தினேசுக்கு இணையாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் அடுத்த வெள்ளியன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், அரசியலில் ஆர்வம் உள்ளதா? ரஜினி அல்லது கமல் இவர்களில் யாரை ஆதரிப்பீர்கள்? என அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நடிகர் தினேஷ், சிறு அகவை முதலே அரசியலில் எனக்கு ஆர்வம் இருந்துள்ளது. அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்தாலும், அதற்கு இன்னும் அனுபவம் தேவை. நியாயமான கோரிக்கைகளுக்காக போராடினால் துப்பாக்கியால் சுடுகிறார்கள், அந்த ஆதங்கமே அரசியலில் இறங்கக் காரணம். தற்போது வழிகாட்ட சரியான தலைவர்கள் இங்கு இல்லை, இருப்பவர்களும் கேள்வி கேட்க மறுக்கின்றனர். கமல்-ரஜினிக்கு எனது ஆதரவு கிடையாது. தினகரனுக்கே எனது ஆதரவு. அவர் பேசுவது எனக்கு பிடிக்கும். எல்லாவற்றையும் அவர் நேர்த்தியாக அணுகுவது எனக்குப் பிடித்திருக்கிறது, எனத் தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,869.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



