Show all

கர்நாடகஇழுபறி! வாக்கு எந்திரங்களை பயன் படுத்துவதில் பாஜகவிற்கு கணக்குப் பிழை ஏற்பட்டிருக்கக் கூடுமோ

02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை நம்ப முடியவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறும்போது, 'கர்நாடகாவில் காங்கிரஸ் நல்ல நிலையில் இருந்தது. சித்தராமையா அரசு மீது மக்களிடம் அதிருப்தி நிலவவில்லை. இந்த நிலையில் பாஜக வெற்றி பெற்றதை நம்பமுடியவில்லை. மக்களின் எண்ண ஓட்டத்துக்கும் தற்போது அங்குள்ள நிலவரத்துக்கும் வேறுபாடு உள்ளது.

 

எடியூரப்பா மீதான ஊழல் புகார் காரணமாக அவருக்கோ, பாஜகவுக்கோ நற்பெயர் இல்லை. கர்நாடகாவில் பாஜக வெகுஜன கட்சி அல்ல. எனவே தேர்தல் முடிவுகளை முறையாக ஆராய வேண்டும்.

பலம் குறைந்த கட்சி அதிக வாக்குகள் பெறும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது. இந்த சந்தேகங்களை போக்கும் வகையில், வாக்குப் பதிவை பழைய வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்றார்.

வாக்குப் பதிவு எந்திரங்களை பயன் படுத்துவதில் பாஜகவிற்கு கணக்குப் பிழை ஏற்பட்டிருக்கக் கூடும் இல்லாவிட்டால் இந்த இழுபறி வந்திருக்காது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,789.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.