Show all

எது ஆளுநருக்குப் பிடிக்கும்! பெரியகுழு ஆட்சி அமைக்கும், சிறிய குழு காசுகொடுத்து ஆள்பிடிக்கும்

02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையை அழைத்து ஒரு குழுவில் ஒரேகட்சியைச் சேர்ந்த 104 பேர்கள் இருக்கிறார்கள், இன்னொரு குழுவில் இரண்டு கட்சியைச் முறையே 78பேரும் 37பேரும் இருக்கிறார்கள் எது பெரிய குழு என்று கேட்டால், 78ம் 37ம் சேர்ந்தால் 115 இதுதான் பெரிய குழு என்று உடனே சொல்லி விடும்.

நம்ம கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா! இந்தப் பெயரில் தான் இந்திய சாலைகளை ஒருங்கிணைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை தலைமை அமைச்சர் நமக்கு கிடைத்திருந்தார். இந்த ஆளுநருக்கு விடிய விடிய யோசித்தும் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. எந்தக் குழு பெரிய குழு என்று.

நம்ம ஊடகங்கள் இருக்கின்றனவே, கொடுமையிலும் கொடுமை! ஐந்து கட்சிக்கு ஐந்து பேர்களை அழைத்து எந்தக் குழு பெரிய குழு என்று பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.    மாநிலத்தின் அரசியல் சாசன பாதுகாவலர் என்ற போற்றுதலுக்கு உரிய ஆளுநராக உள்ள வஜுபாய் வாலா. ஆர்எஸ்எஸ்காரராக இருக்கலாம், பாஜகவின் அமைச்சராக இருந்திருக்கலாம், மோடிக்காக தான் போட்டியிடும் தொகுதியையே கூட விட்டுக்கொடுத்தவராக இருக்கலாம், அதெல்லாம், இப்போது அவசியமற்றது. அரசியல் சாசன பாதுகாவலர் இன்று, வஜுபாய் வாலா என்பவர் தனி நபர் இல்லை. அவர் அம்மாநிலத்தின், ஆறரை கோடி மக்களுக்குமான அரசியல் சாசன பாதுகாவலர். அவர் சட்டப்படியும், அரசியல் சாசனப்படியுமே பயணிக்க வேண்டிய பாதையில் இருப்பவர். இது கோவா மாதிரி குட்டி மாநிலம் அல்ல. இந்தியாவின் முதன்மையான 7 பெரிய மாநிலங்களுக்குள் ஒன்று. இங்கே நடைபெறும் சிறு அசைவும் தேசம் முழுக்க கவனிக்கப்படும். 

இதுபோன்ற அரசியல் சாசன சிக்கல்களின் போதெல்லாம் பொம்மை வழக்குதான் கை காட்டப்படும். அதன்படியே இந்த பிரச்சினையையும் அணுகலாம். பொம்மை வழக்கில் கூறப்பட்டுள்ள தீர்ப்புபடி, எந்த ஒரு கட்சிக்கும் தனித்து பெரும்பான்மை அமைக்க பலம் இல்லாதபோது, 1) தேர்தலுக்கு முன்பாக கூட்டணி வைத்து அதன் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ள கட்சிகளை ஆட்சியமைக்க ஆளுநர் முதலில் அழைக்க வேண்டும். 2) தேர்தலுக்கு முன்பு கூட்டணி இல்லாவிட்டால், பிறகு கூட்டணி அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ள கட்சியை அழைக்க வேண்டும். அவர்களும் ஆட்சியமைக்க போதிய பலத்தோடு இல்லை என்றால், அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல முடியவில்லை என்றால், அப்போது வேண்டுமானால் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் பார்த்தால், கர்நாடகாவில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை பலம் பெறவில்லை. தேர்தலுக்கு பின்பு கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ்-மஜதவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது (வெற்றி பெற்ற தொகுதிகள், அடிப்படையில்). எனவே மஜத-காங்கிரஸ் கூட்டணியைத்தான் ஆளுநர் முதலில் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். மேலும், அண்;மையில் வெளியான உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்பும் கூட இதையே வலியுறுத்துகிறது. இவ்வாறு சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

தனிக்குழு என்றபோதும் பெரும்பான்;மை இல்லாத நிலையில், பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பாரேயானால் குதிரைப் பேரத்திற்குதாம் அது வழிவகுக்கும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,789. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.