Show all

ஏர்டெல் மாதிரி இனி ஜியோவிலும்! இந்தத் திடீர் கரிசனத்திற்கு காரணம் என்ன என்ற விவாதம் இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது

இனி ஜியோ வாடிக்கையாளர்களும் ஏர்டெல் வாடிக்கையாளர்களைப் போல மற்ற தொலைத்தொடர்பு நிறுவன எண்களோடான வரம்பில்லாத அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
 
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஏர்டெல்லில் ரூபாய் 598க்கு 84நாட்களுக்\கு அழைப்புகள் வரம்பு இன்றி வழங்கப்படுகிறது. ஆனால் ஜியோவில் ரூபாய் 599க்கு 84நாட்களுக்கு ஜியோவிலிருந்து ஜியோவுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு மட்டுமே வரம்பு இன்றி பேச முடியும். ஏர்டெல் போன்ற மற்ற நிறுவன அழைப்புகளுக்;கு 3000 நிமிடங்கள் மட்டுமே என்று வரம்பு வைத்துள்ளது. இந்த வகை கட்டணப்பிரிவில்தாம் இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களிலும் வாடிக்கையாளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாளையிலிருந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனஎண் அழைப்பிற்கு ஜியோ- தனது வாடிக்கையாளர்களுக்கு விதித்திருந்த தனிக்கட்டணத்தை நீக்கியுள்ளதாகவும், இனி எல்லா அழைப்புகளுக்கும் ஏர்டெல் மாதிரியே வரம்பு இல்லை என்பதாகவும் ஜியோ தெரிவித்துள்ளது. 

வாடிக்கையாளர் மீதான இந்தத் திடீர் கரிசனத்திற்கு காரணம் என்ன என்ற விவாதம் இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.