வங்கிக் கணக்குக்கு, இயங்கலை வழியாக, பணம் அனுப்புவதற்காக, வங்கிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. இது, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வங்கியின் ஒரு கணக்கில் இருந்து, மற்றொருவர் கணக்குக்கு, என்.இ.எப்.டி., எனப்படும், தேசிய மின்னணு பணப்பரிமாற்றம் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்., எனப்படும், உடனடி பணப்பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம், பணம் அனுப்பும் நடவடிக்கைகளுக்கு வங்கிகளிடம் இருந்து, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி கட்டணம் வசூலிக்கிறது. அதற்காக வங்கிகள், வாடிக்கையாளர்களிடம் இருந்து, சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன. ஒருபக்கம் மின்னணு ஊக்குவிக்கும் வகையில் கருத்துப் பரப்புதல் செய்து கொண்டு, மற்றொரு பக்கம் அதற்காக கட்டணம் வசூலித்து வந்தது மக்களிடம் அதிர்ப்தியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, இந்த பரிமாற்றங்களுக்கான கட்டணம் முழுவதுமாக நீக்கப்படும் என, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்தது. அது, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. வங்கிகளும், இந்த சலுகையை, வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்து உள்ளது. அதனால், சேவைக் கட்டணத்தை விலக்கி கொள்வதாக பெரும்பாலான வங்கிகள் அறிவித்துள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,200.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



