முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் பரிந்துரையை ஏற்று தமிழக அரசின் அடையாளங்களில் பட்டாம் பூச்சிகளில் ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சியை தமிழ்நாடு அரசு அடையாளமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக அடையாளங்களில், தமிழக அரசின் ஆட்சி மொழியாக தமிழ், தமிழக அரசின் சின்னமாக திருவில்லிப்புத்தூர் கோபுரம், மரமாக பனைமரம், பறவையாக மரகதப் புறா, விலங்காக வரையாடு, மலராக செங்காந்தள் மலர், பழமாக பலாப்பழம், விளையாட்டாக கபடி இருந்து வருகிறது. இந்நிலையில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் பரிந்துரையை ஏற்று தமிழக அரசின் அடையாளங்களில் பட்டாம் பூச்சிகளில் ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சியை தமிழ்நாடு அரசு அடையாளமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,200.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



