03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்தது. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே, கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக வராத நிலையிலும் ஆட்சி அமைத்தது. இம்மாநிலங்களில் பா.ஜனதா இரண்டாவது இடம் பிடித்தது. இருப்பினும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது, ஆளுநர்களும் அதற்கு அனுமதியளித்தார்கள். பாஜக பின்பற்றிய, கற்றுத் தந்த அதே சூத்திரத்தின் அடிப்டையில் காங்கிரஸ் கர்நாடகாவில் முன்னெடுத்தது. ஆனால் பலனளிக்கவில்லை. எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றார். இப்போது பாரதீய ஜனதாவின் கர்நாடக சூத்திரத்தை எதிர்க்கட்சிகள் வரிசையாக கையிலெடுக்க தொடங்கி உள்ளன. கோவாவில் முதலிடம் பிடித்த காங்கிரஸ் இப்போது ஆட்சியமைக்க எங்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளது. பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிகப்பட்சமாக ராஷ்டீரிய ஜனதா தளம் 80 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. பாரதீய ஜனதா கட்சி 53 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் தனிப்பெரும்பான்மையான லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இப்போது அதுவே கர்நாடகாவில் மாறுபட்டு உள்ளது. இப்போது ஆளுநர் எங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ராஷ்டீரிய ஜனதா தளம் கோரிக்கையை முன்வைத்து உள்ளது. மேகலாயாவிலும் இதுபோன்ற கோரிக்கை எழ தொடங்கி உள்ளது. தனிப்பெரும்பான்மையான கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்கள் என இம்மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளுநரை சந்திக்க உள்ளன -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,790.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



