03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்க் குடும்ப அமைப்புமுறை பத்தாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க் குடும்பம் கட்டமைத்திருக்கிறது. இன்றைக்கு நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டசமுக அமைப்பு தன் அங்கமாக கருத வேண்டிய குடும்பங்கள்மீது எந்தப் பொறுப்பும் இல்லாமல், அனைத்துக் குற்றப்பின்னனிகளுக்கும் பயிற்றுக் களமாக இருக்கிற சாராயக் கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்க் குடும்பங்களில், பெண் தம்பிள்ளைகளையும், கணவரையும் இற்றைச் சமுதாய அமைப்பில் இருந்து காப்பாற்றி பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதும், கணவரை அதற்குத் துணையாகப் பெறுவதிலும் கூடுதல் சுமையாக இருக்கிறது. சட்டசமுக அமைப்பை தமிழ்க் குடும்ப அமைப்பைப் போல பொறுப்புள்ளதாக கட்டமைக்க தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் முன்வர வேண்டும். இதோ! எதிர்காலத்தில் வளர்ந்து செழிக்க வேண்டிய ஒரு மகனால், தந்;தையை சட்டசமூகம் பிணைத்துக் கொண்ட மதுப்பழக்கத்தில் இருந்து மீட்க முடியாமல் தன்னை அழித்துக் கொண்டு சமூகத்திற்கு பாடம் கற்பிக்க முயன்ற நெஞ்சை ஈரமாக்கும் அவலம். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தினேஷ் நல்லசிவம் அகவை17 இவர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிமுடித்து நீட் தேர்வுக்காக படித்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் தினேஷ், தனது தந்தைக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாடசாமி திருந்துவதாக தெரியவில்லை. இதனால் மனம் நொந்துபோன தினேஷ், குழப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு பதiநை;து நாட்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த கடிதத்தில் மதுக்கடைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், இந்தியத் தலைமை அமைச்சர் மோடியும் உடனடியாக மூட வேண்டும் எனவும் இல்லையென்றால் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன் என்றும் ஆதங்கப்பட்டு தெரிவித்திருந்தார். தினேஷ் மரணம் அனைத்து தரப்பினரையும் அதிர்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்துக்கு பின்னர் மாடசாமி, இனி இறந்துபோன தன் மகன் தினேஷ் மீது சத்தியமாக மது அருந்தமாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அந்த முடிவில் தினேஷ் நல்லசிவம், 1,200-க்கு 1,024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தமிழ்-194, ஆங்கிலம்-148, இயற்பியல்-186, வேதியியல்-173, உயிரியல்-129, கணிதம்-194. மகனின் இந்த மதிப்பெண்களை கேட்டதும் அதிர்ச்சியடைந்த மாடசாமி, கதறி கதறி அழுதார். இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற மகனை இழந்துவிட்டேனே என்று மனம் வெம்பி தெரிவித்தார். சட்டசமுக அமைப்பை தமிழ்க் குடும்ப அமைப்பைப் போல பொறுப்புள்ளதாக கட்டமைக்க தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் முன்வர வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,790.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



