Show all

ஊழல் செய்வதற்கு அழைப்பிதழ்! கர்நாடக ஆளுநர் செய்தவேலை: ஜெத்மலானி

03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனது அதிகாரத்தை ஆளுநர் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என கர்நாடக ஆளுநரின் முடிவு குறித்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறினார். 

கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளதால் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை ஆளுநர் வஜூபாய் வாலா அழைத்தார். எடியூரப்பா பதவியேற்க தடை கோரி நள்ளிரவில் உச்சஅறங்கூற்றுமன்றத்தில்; காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தும் வீணாகிப்போனது. இதையடுத்து இன்று காலை முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். 

ஆளுநர் முடிவு குறித்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறியதாவது; 

எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநரின் முடிவு முட்டாள் தனமானது. ஊழல் செய்வதற்கு அழைப்பிதழ் அனுப்பிய வேலையை ஆளுநர் செய்துவிட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,790. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.