மேற்கு வங்காளத்தில், மனைவி கட்சி மாறியதால் தனது மனைவியிடமிருந்து மணவிலக்கு பெறப்போவதாக பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சௌமித்ரா கான் தெரிவித்துள்ளார். திமுகவில் இருக்கும் அப்பாவைக் கேட்டால், திமுகவின் சாதனைகளைப் பட்டியில் இடுவார். திமுக இல்லாமல் இருந்திருந்தால் நாம் இழந்திருக்க வேண்டிய உரிமைகளையும், உடைமைகளை பட்டியல் இட்டு அசத்துவார். அதிமுகவில் இருக்கும் அம்மாவைக் கேட்டால், எம்ஜியாரின் சத்துணவு, செயலலிதாவின் இலவசங்களைப் பட்டியல் இட்டு அசத்துவார். நாம்தமிழர் கட்சியில் இருக்கும் மகனைக் கேட்டால், திராவிடத்தால் வீழ்ந்தோம். தமிழியலால் எழுவோம் என்று முழங்குவார். மூன்றுக்கும் அடிப்படை இருக்கும். சேர, சோழ, பாண்டியர்கள் என்ற மூன்று மாமன்னர்கள் ஆட்சியில் உலகத்தின் முதல் அணைக்கட்டிலிருந்து உலகிலேயே பொருள் இலக்கணம் கொண்ட ஒரே மொழி தமிழ் என நிறுவியது வரை, சங்கம் வைத்து தமிழ், தமிழரை வளர்த்தெடுத்தவர்கள் அல்லவா நம் மன்னர்கள். இந்த நிலையில் நேற்று காலை கொல்கத்தாவில் நடைபெற்ற விழா ஒன்றில் சுஜாதா மொண்டல் கான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து இதழியலாளர்களைச் சந்தித்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சௌமித்ரா கான், “நான் உங்களுக்கு முழு சுதந்திரத்தையும் தந்திருக்கிறேன். பத்துஆண்டு உறவு முடிவுக்கு வருகிறது. எனது வீட்டின் லட்சுமி திருடப்பட்டிருக்கிறாள். முறையான மணவிலக்குக்கான ஆவணங்களை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். அவற்றில் கையெழுத்திட்டு அனுப்புங்கள். இன்று முதல் எனது குடும்ப பெயரான ‘கான்’னை இனி பயன்படுத்தாதீர்கள்’ என்று பேசியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைத்த பின்னர் இதழியலாளர்களைச் சந்தித்த சுஜாதா மொண்டல் கான், ‘எனது குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாக அவரை திருமணம் செய்துகொண்டேன். அவரை நான் நேசிக்கிறேன். எப்போதும் அப்படியே தான் செய்வேன். எனது நெத்தியில் குங்குமம் அப்படியே தான் இருக்கிறது. அரசியல் காரணமாக குடும்ப உறவை விலக்கிக் கொள்ள முடியுமா? நான் இந்த கட்சியில் சேரவேண்டும் என்பதற்காக யாரும் என்னை மணவிலக்கு பெற்றுக்கொண்டு வரச் சொல்லவில்லை’ என்று கூறினார். தொடர்ந்து பேசிய சுஜாதா, ‘என் கணவர் வெற்றிபெற பல்வேறு தாக்குதல்களை நேரடியாகச் சந்தித்திருக்கிறேன். எத்தனையோ தியாகங்களைச் செய்த பின்னரும் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. எனக்கு மரியாதை வேண்டும். நான் சுதந்திரமாக சுவாசிக்க விரும்புகிறேன். எனது அக்காவுடன் (மம்தா) சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். ஒருநாள் அவர் என்னைப் புரிந்து கொள்வார், யாருக்குத் தெரியும் அவரும் இந்த கட்சிக்கு வரக் கூட வாய்ப்பிருக்கிறது’ என்று கூறினார்.
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் அப்பா திமுக, அம்மா அதிமுக, மகன் நாம்தமிழர் கட்சி இயல்பாகவே இருப்பார்கள்
மேற்கு வங்கதின் பிஷ்ணுபூர் தொகுதி பாஜக பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சௌமித்ரா கான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் பிஷ்ணுபூர் தொகுதியில் தேர்தலில் களம் கண்டு வெற்றியும் பெற்றார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்கு வங்க பாஜக இளைஞரணித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அவரின் மனைவி சுஜாதா மொண்டல் கான் கருத்துப் பரப்புதல் செய்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



