கற்றலின் தொடக்கத்தில் இருக்கும், மழலையர் வகுப்புப் பிள்ளைகளும் எள்ளி நகையாடும்- பாஜகவின், “கொரோனா தடுப்பூசி இலவசம்” தேர்தல் அறிக்கைக்கு, சப்பைக்கட்டு கட்டிய தேர்தல் அணையம், பாஜகவின் கிளை அமைப்பாகத்தானே இருக்க முடியும் என்கிறார் சஞ்சய் ராவத். 16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பாஜகவின் கிளை அமைப்பு போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது. அதில், மக்கள் கொரோனாவுக்கு அல்லல்பட்டு வரும் நிலையில், ஒரு ஆணியும் பிடுங்காத ஒன்றிய அரசின் பாஜக, பீகார் தேர்தலில் வென்றால் மாநில மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறி இருந்தது. பாஜகவின் இந்த அறிவிப்பு கடும் விமர்சனங்களை சந்தித்தது. இப் பாடு குறித்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் கொள்கை முடிவாக அறிவிக்கப்படும் வாக்குறுதி, தேர்தல் விதிமீறலாகக் கருதப்பட மாட்டாது என்று தெரிவித்தது அதனினும் மேலான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்று இதுகுறித்துப் பேசிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் ஒரு கிளை சஞ்சய் ராஜராம் ரவுத் பாராளுமன்ற உறுப்பினரும், சிவசேனா கட்சியைச் சேர்ந்தவருமான இந்திய அரசியல்வாதி ஆவார். சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்ட மராத்தி செய்தித்தாள் சமானாவின் நிர்வாக ஆசிரியராகவும் உள்ளார்.
அமைப்பு போல செயல்படுகிறது. எனவே அவர்களிடமிருந்து நீங்கள் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. தேர்தல் சமயத்தில் பீகாரில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் பார்க்கின்றனர். அப்படியிருந்தாலும் தேர்தல் ஆணையம் வெளிப்படையானது என்று மக்கள் இன்னமும் நம்புகின்றனர்” என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



