Show all

ஒரு கோடி அபராதம்; இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அதிரடி! ஏதற்கு? யார் மீது?

நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோரை மீண்டும் நியமனம் செய்தது தொடர்பான தகவலை தாமதமாக வழங்கியதற்காக இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஏதற்கு? யார் மீது?

16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொடுப்பனவு வங்கிகள் இந்திய கட்டுப்பாட்டு வங்கியால் கருத்தியல் செய்யப்பட்ட ஒரு புதிய வங்கியாகும். இந்த வங்கிகள் கட்டுப்படுத்தப்பட்ட வைப்பு, ஏற்றுக்கொள்ள முடியும். வாடிக்கையாளர் 100,000 மேலும் வைப்புகளை அதிகரிக்கலாம். 

இந்த வங்கிகளால் கடன்கள் வழங்க முடியாது. நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்குகள் இரண்டையும் அத்தகைய வங்கிகளால் இயக்க முடியும். கொடுப்பனவு வங்கிகள் ஆதாய அட்டைகள் மற்றும் கடன்அட்டைகளையும் வழங்கலாம். இயங்கலை செல்பேசி வங்கியை வழங்கலாம். பாரதி ஏர்டெல் இந்தியாவின் முதல் கொடுப்பனவு வங்கியை அமைத்தது.

இந்தியாவில் முன்னணி நிறுவனமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜியோவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆறாவது கொடுப்பனவு வங்கியாக உருவெடுத்தது.

தற்;போது விதிகளை பின்பற்றாததற்காக ஜியோ கொடுப்பனவு வங்கிக்கு ரூபாய் ஒரு கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜியோ கொடுப்பனவு வங்கி பிரிவு 47 ஒன்றில் மூன்றாவது விதியை மீறியுள்ளது. எந்தவொரு பரிவர்த்தனையையும் முடிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவின், ஒழுங்குமுறை விதிமுறைகளையும் ஜியோ கொடுப்பனவு வங்கி மீறியுள்ளதாக இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் சட்டத்தின் பிரிவு 35 ஆவில் கூறியுள்ளபடி, ஜியோ கொடுப்பனவு வங்கி, நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியை மீண்டும் நியமனம் செய்வது குறித்த தகவல்களை பதவிக்காலம் முடிவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பதவிக்காலம் முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதாம், ஜியோ கொடுப்பனவு வங்கி இந்த தகவலை வழங்கியுள்ளதாம்

எனவே இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதற்காக ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விளக்குமாறு உத்தரவிட்டு, ஜியோ கொடுப்பனவு வங்கிக்கு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி கவனஅறிக்கை அனுப்பியது. வங்கியின் பதிலைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட பின்னர், தனிப்பட்ட விசாரணை நடவடிக்கைகளின் போது அந்நிறுவனம் அளித்த பதில் மதிப்பாய்வு செய்யப்பட்டது, அதன்பிறகு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அபராதம் விதித்ததுள்ளது என்று குறிப்பிடப்படுகிறது

இந்த நிலையில் இப்படி ஒரு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறித்து ரிலையன்ஸ் தரப்பில் எந்த அதிகாரப்பாட்டுத தகவலும் வெளியாகவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.