மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த முன்வரைவு. ஆதரவு 125, எதிர்த்து 105 வாக்குகள். சிவசேனா வெளிநடப்பு செய்தது- பாஜகவுக்கு ஆதரவான நடவடிக்கையாகி குடியுரிமை சட்ட திருத்த வரைவு நிறைவேறியது. 25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவு. ஆதரவு 125, எதிர்த்து 105 வாக்குகள். சிவசேனா வாக்களிக்காமல், வெளிநடப்பு செய்து, குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவு வெற்றிக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவு, இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. சட்டமுன்வரைவுக்கு ஆதரவாக 125 பாராளுமன்றஉறுப்பினர்களும், எதிராக 105 பாராளுமன்றஉறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்திய குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவு முந்தாநாள் மக்களவையில் பதிகை செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்த முன்வரைவுக்கு ஆதரவாக 311 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் கிடைத்தன. இதனால் மக்களவையில் எளிதாக சட்ட முன்வரைவு நிறைவேறியது. இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் இந்த சட்டமுன்வரைவு பதிகை செய்யப்பட்டது. இந்திய குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவு நிறைவேற்றத்தின் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், சமணர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த சட்டமுன்வரைவு இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. இதனால் இந்த மசோதா கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. சிவசேனா வெளிநடப்பு செய்து. பாஜகவுக்கு ஆதரவு நடவடிக்கையை முன்னெடுத்தது. இதனால், இந்த சட்டம் நிறைவேறியுள்ளது. இரு அவைகளும் நிறைவேறிய இந்த முன்வரைவுக்கு, குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதும், சட்டம் நடைமுறைக்கு வரும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,363.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



