Show all

எல்.முருகன் அதிரடி! தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்

“தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழக அமைச்சரவையிலும் பாஜக இடம்பெறும்” என்று எல்.முருகன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள், கொரோனா பாதிப்பில் என்ன செய்வதென்று தெரியாத குழப்பத்தில் ஏனோதானோவென்றே தயாராகி வருகின்றன. 

ஆனால் தமிழக பாஜக மாநில அளவிலான புதிய நிர்வாகிகளை நியமித்து நேற்று அதற்கான பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில் பாஜகவில் இணைந்த திரைத்துறையினர் பலருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவிக்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் தனுசின் தந்தையும், ரஜினிகாந்தின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா மற்றும் இசையமைப்பாளர், கங்கை அமரன் ஆகியோரும் தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே.சுரேஷ் ஒருவகை அணிக்கு மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுளார். இயக்குநர் பேரரசு, பெப்சி சிவா, தீனா ஆகியோர் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவுக்கு மாநில செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் குறித்து கவலையேதும் இல்லாமல், அடுத்த ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்து வருகிறது பாஜக. 

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழக அமைச்சரவையிலும் பாஜக இடம்பெறும்” என்று தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.