Show all

மருத்துவமனை இயக்குனர் கைது! பரிசோதனை செய்யாமலே 6300 பேர்களுக்கு கொரோனா இல்லை என்பதாக சான்றிதழ் வழங்கியவர்

வங்காளதேசத்தில், பரிசோதனை செய்யாமலே 6300 பேர்களுக்குக் கொரோனா இல்லை என்பதாகச் சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை இயக்குனரை, இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்தபோது காவல்துறையினர் கைது செய்தனர்.

02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகையே உலுக்கி வரும் கொரோனா நுண்நச்சு வங்களதேசத்திலும் பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 2496 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், வங்காளதேசத்தில் கொரோனா நுண்நச்சு பரவியவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் மிக அதிகம் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக கொரோனா பரிசோதனைகள் மிகக்குறைவாக செய்யப்படுவதாகவும், பல உயிரிழப்புகள் கணக்கில் வராமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அந்நாட்டில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் பரிசோதனைகள் சரிவர செய்யப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் பேரறிமுக மருத்துவமனை இயக்குனர் கொரோனா பரிசோதனை செய்யாமலேயே 6300க்கும் அதிகமானோருக்கு போலியாக கொரோனா இல்லை என சான்றிதழ் கொடுத்துள்ள குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள பேரறிமுக மருத்துவமனையின் இயக்குனர் முகமது சாகித் அகடவை 42 இவர் தனது மருத்துவமனையில் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்வதாக அந்நாட்டு அரசிடம் கணக்குகளை காட்டி வந்துள்ளார். 

ஆனால், அவர் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு பரிசோதனை செய்யாமல் பணம் வாங்கிக்கொண்டு கொரோனா இல்லை என போலியாக சான்றிதழ் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து முகமது சாகித்தின் மருத்துவமனையில் அந்நாட்டு நலங்குத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் முகமதுவின் மருத்துவமனையில் 10 ஆயிரத்து 500 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியது. 

ஆனால் அதில் 4 ஆயிரத்து 200 கொரோனா பரிசோதனைகள் மட்டுமே உண்மையாக நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதும் எஞ்சிய 6 ஆயிரத்து 300 சான்றிதழ்கள் போலியாக வழங்கப்பட்டதும் தெரியவந்தது.

பணத்திற்காக கொரோனா பரிசோதனை செய்யாமலேயே 6 ஆயிரத்து 300 பேருக்கு போலியாக கொரோனா இல்லை என சான்றிதழ் அளித்ததும் தெரியவந்தது.

இதனால், கொரோனா பரிசோதனை குறித்து போலியாக சான்றிதழ்களை விநியோகம் செய்த முகமதுவை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு காவலர்கள் இறங்கினர். ஆனால் மருத்துவமனை தலைவரான முகமது தலைமறைவானார்.

இந்நிலையில், 9 நாட்கள் நீண்ட தேடுதலுக்கு பின் இந்தியா-வங்காளதேசத்தை இணைக்கும் எல்லையோர ஆற்றின் அருகே மறைந்திருந்த முகமதுவை அந்நாட்டு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்படுவோம் என நினைத்த முகமது எல்லையோர ஆற்றின் வழியாக இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நுண்நச்சுப் பரிசோதனை செய்யாமலே கொரோனா இல்லை என சான்றிதழ் கொடுத்த பல மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்காள தேசம் பாட்டில், உலகம் கவனமாக இருக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையை இந்த நடவடிக்கைகள் நமக்கு அறிவிப்பதாய் இருக்கின்றன. இவர்களில் ஹிந்துகளுக்கு இந்தியாவில் குடியுரிமை தர சட்டம் திருத்திய நடுவண் பாஜக அரசு கவனமாக கூடுதல் இருக்க வேண்டியது இந்தியவிற்கான பாதுகாப்பு கட்டாயம் ஆகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.