Show all

நடுவண் அமைச்சராக உள்ளதால் தன்பாடு கொண்டாட்டம்தான்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு தன்னை பாதிக்கவில்லை என்கிறார் ராம்தாஸ் அத்வாலே

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், நடுவண் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால் நான் ஒரு நடுவண் அமைச்சர், எனக்கு அரசின் சலுகைகள் உள்ளன. அவற்றை நான் பயன்படுத்தி வருவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி எனக்கு கவலையில்லை. எனது நடுவண் அமைச்சர் பதவி பறிபோனால்தான் நான் பாதிப்பு அடைவேன் என கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், நடுவண் அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஒங்க ஆட்சியை அப்புறப் படுத்தி விட்டால் எங்களுக்கு பாதிப்பு முடிந்து விடும். அடுத்து வருகிறவன் ஏதாவது கொஞ்சமாவது மக்களுக்காக நிற்பான் ;ஒங்களைப் போல கார்ப்பரேட்டுகளுக்கு நிற்காமல். அப்போ எங்க பாதிப்பு முடியும் ;ஒங்களுக்கு பாதிப்பு தொடங்கும் என்று மக்கள் இணையத்தில் பதிவு போட்டு வருகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,912.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.